உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 பார்த்துவருமாறு ஸ்ப்ரெளட்டை அனுப்பினர்கள். அவன் சென்று பார்த்துவிட்டு வந்து இரண்டு சிப்பாய்கள் வந்திருப்பதாகச் சொன்னன். அவர்கள் என்ன .ெ ச ய் து கொண்டிருக் கிருர்கள்?" 'மதுபானம் வேண்டுமென்று கேட்டுக்கொண் டிருக்கிருர்கள்.” - 'எல்லைக்காவல் ரோந்துப் படை யினர்தானே!” 'எனக்குத் தெரியாது. அவர்களின் இடைக் கச்சைகளில் துப்பாக்கிகள் இருக்கின்றன.” அந்த காவல் படைவீரர்கள் இருவரும் உள்ளே நுழைந்து முக்காலிகளை இழுத்து நடுவிலிருந்த மேஜையருகே போட்டுக்கொண்ட போது, ஃபானும் லெய்வாவும் கீழே டோமினேஸ் ஆடிக்கொண்டிருந் தார்கள்; காவலாளிகள் வந்து அமர்ந்ததையும் கவனித்தனர். அடிக்கடி அவர்கள் காவலாளிகளின் மீது பார் வையைச் செலுத்தினர்கள். அவர்கள் இருவரும் தங்கள் முன்னுல் கண்ணுடி தம்ளரில் மதுவை வைத் துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். ஒருவன் எழுந்து நின்று தன்னுடைய இடுப்பு வாரைக் கழற்றிவிட்டு நிம்மதியுடன் நெடுமூச்சு விட்டான். பிறகு அதை மேஜைமீது தூக்கி எறிந்துவிட்டு துப்பாக்கியை அதன்மீது வைத்தான். பிறகு சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, மறுபடியும் முக்காலியில் அமர்ந்தான். மற்ற வன் தன்னுடைய தொப்பியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்துவிட்டுத் தன் தலையைச் சொரிந்து கொண்டான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/378&oldid=752963" இலிருந்து மீள்விக்கப்பட்டது