உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379


ஃபானும் லெய்வாவும் மூச்சுக்கூட விடாமல் மெளனமாக விளையாடினர்கள். ஃபானின் முகம் கடுகடுத்திருந்தது. ஆனல் படைவீரர்களோ முற்றி லும் நிம்மதியடைந்தவர்களாகக் காணப்பட்டார் ᎼᏂ ❍Ꭲ . அப்போது விடுதி நிர்வாகி அறைக்கு நடுவே வந்து, 'உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டான். “வேண்டாம் நாங்கள் திரும்பிப் போவதற்கு முன்னுல் இன்னும் சிறிது பானம் அருந்தப் போகி ருேம். போக்லோவிலிருந்து யாராவது நாடோடி கள் இவ்வழியே சென்றதுண்டா?” 'எனக்குத் தெரிந்தவரை அப்படியொன்று மில்லை.” அவர்களில் ஒருவன் லெய்வாவின் முகச்சாயலை யும், பிற்பகலின் மங்கிய சூரிய ஒளி அவள் முகத்தி லும் தலை முடியிலும் விழுந்து கொண்டிருந்ததையும் பார்த்தான். "அங்கே பார்க்காதே’ என்று ஃபான் முணு முனுத்தான். இருவரில் உயரமாக இருந்த இராணுவ வீரன் கோப்பையைக் கையில் தூக்கிக்கொண்டு, 'ஏய்ச்சிங்! என்ன? உன்னை நீயே ரசித்துக் கொண்டிருக்கி ருயே?’ என்று கேட்டான். ஃபான் எழுந்து நின்று தன்னுடைய கண்ணுடிக் கோப்பையை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/379&oldid=1275047" இலிருந்து மீள்விக்கப்பட்டது