உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

881 "அவர்கள் ஏதாவது விசாரித்தார்களா?” "அவர்கள் நாங்கள் இருவரும் ஏகாந்தமாக இருந்ததாக நினைத்தார்கள். நாங்கள் பிங்ஷானி லிருந்து வருகிருேம் என்று அவர்களிடம் சொல்லி விட்டோம்!' - சைசாமும் ஸ்வாட்டும் இரவுச் சாப்பாட்டின் போது வந்து அவர்களுடன் கலந்துகொண்டார்கள். ஃபான் அங்கு வந்த படை வீரர்களைப்பற்றி அவர் களிடம் கூறினன். 'எனக்குத் தெரியும். அவர்கள் அடிக்கடி இங்கே குடிப்பதற்காக வருகிருர்கள். ஒரு நல்ல சேதி, இப் போது இங்கே பொறுப்பில் இருப்பவர் சார்ஜண்ட் லாவோ ஆ! நான் அவர்களில் ஒருவரிடம் பேசி னேன். நாளைய தினம் முடிக்கலாம் என்று நான் நம்புகிறேன். அதோடு நீங்கள் ஏமாந்துவிடாதீர் கள். அவர்கள் நம்மைப்பற்றிய சகல விவரங்களை யும் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் மூலமோ, விடுதிக் காரனிடமிருந்தோ தெரிந்துகொண்டிருக்கிரு.ர்கள்.” சிறிது நேரத்திற்கெல்லாம் ஃபானும் லெய்வா வும் மறுபடியும் மத்தியிலிருந்த மேஜைமீது டாமி னேஸ் ஆட்டத்தைத் தொடங்கினர்கள். டுவான் குடும்பத்தினரை தங்களுடன் ஆடுவதற்கு அழைத்த னர்; ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். 'ஏன் உங்களுக்குப் பயமாக இருக்கிறதா?” 'இல்லை, நாங்கள் ஒருபோதும் டாமினேஸ் ஆட்டம் ஆடிப்பழக்கமில்லை. எங்களைப்பற்றிக் கவலைப் படாதீர்கள். நீங்கள் ஆட்டத்தைக் கவனியுங்கள்!” அப்பொழுது சுமார் ஒன்பது மணி இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/381&oldid=752967" இலிருந்து மீள்விக்கப்பட்டது