பக்கம்:இலட்சிய பூமி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382


யாரோ கதவைத் தட்டினர்கள். அதற்குப் பதிலிறுக்கும் முன்னமேயே நன்கு உடையணிந்த நடுத்தர உயரமுள்ள எடுப்பான முகத்தோற்றமும் நேராகக் கீறிவிட்டாற் போன்ற உதடுகளும் அவற்றை ஒட்டிய மீசையும் கொண்ட ஒர் அதிகாரி உள்ளே நுழைந்தான். அவனுடைய முகபாவத்தில் உறுதியும் கண் இமைகள் பக்கவாட்டில் கீழ் நோக் கிச் சரிந்தும் இருந்தன. அவன் மேஜையைச்சுற்றி அமர்ந்திருந்த குழுவினரை வியப்புடன் நோட்ட மிட்டபடி கம்பீரமாக நடந்தான். அது பாவனையா அல்லது உண்மையா என்பதை அவர்களால் தீர் மானிக்க முடியவில்லை. 'ஹல்லோ!” என்று அழைத்தபடி சைசாம் அவனை நோக்கி நடந்தான். 'ஹல்லோ! நீங்களா?” என்று அதிகாரி அழைத்தபடி சைசாமின் முதுகில் தட்டிக்கொடுத்து அவன் கையைக் குலுக்கினன். அப்போது அவன் மிகவும் நேசபாவத்துடன் காணப்பட்டான். லெய்வா அதிகாரியின் தோற்றத்தை வெளிப் படையாகக் கூர்ந்து நோக்கியபோது, ஈஸ் தன்னு டைய உதட்டைக் கடித்துக்கொண்டாள். ஃபானின் கண்ணுடி அணிந்த கண்கள் சஞ்சலத்துடன் கண் னேட்டமிட்டன. "இவர்தான் நண்பர், லாவோவூ" சார்ஜண்ட் என்று சைசாம் அறிமுகப்படுத்தினன். 'வாருங்கள் என் பெயரைச்சொல்லி எல்லோ ரும் மது அருந்துவோம்” என்ருன் சார்ஜண்ட். அவன் குரலில் குதுாகலம், துள்ளியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/382&oldid=1275048" இலிருந்து மீள்விக்கப்பட்டது