பக்கம்:இலட்சிய பூமி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384


எடுத்துவிட்டு தன்னுடைய மேலங்கியின் பொத் தான்களையும் கழற்றியிருந்தான். - ஒர்ஆட்டம் முடிந்ததும் அவன் தன் கைகளை உதறிக்கொண்டான், பல தடவைகள் அவன் ஃபானைப் பார்க்கும்போதெல்லாம் ஃபானின் கண் களும் தன் கண்களையே ஊடுருவுவதைக் கண்டான். அவர்கள் இருவரில் யாரும் எதுவும் பேசவில்லை; ஆனல் இருவரும் ஒருவர் மனத்தை ஒருவர் அறிந்து கொள்ள முயன்றுகொண்டிருந்தனர். "சரி, இப் போது!’ என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித் துக்கொண்டே சொன்னன் அதிகாரி. 'பிறகு நான் மீண்டும் கொஞ்சம் மது அருந்து கிறேன்” என்ருன். "இந்தப் பிரதேசத்தின் காவல் நிர்வாக அதி காரி நீங்கள்தானே?’ என்று ஃபான் விசாரித்தான். "ஆமாம். சின்ன சஞ்செள பெரிய சஞ்செள அப்புறம் கீழேயுள்ள பகுதி யாவும் இதில் அடக்கம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் மாறி மாறி முறை வைத்துப் பணிபுரிகிருேம். அதுதான் வேலையின் ஒழுங்கு முதல் சில தினங்களுக்கு இயற் கைக் காட்சியும் காற்றும் நேர்த்தியாக இருக்கின் றன. ஆனல் பிறகு கள்ளக்கடத்தல் செய்பவர்கள்தப்பியோட முயலும் ஆட்கள் ஆகியவர்களைப் பின் தொடர்ந்து ஓடும் நாட்கள் கொஞ்சம் சலிப்பாக இருக்கும்...! நேற்று என்ன நடந்ததென்று உங்களுக் குத் தெரியுமா? முட்டாள்களின் கூட்டம் ஒன்று நீர்த்தேக்கத்தைக் கண்டதும் தாங்கள் ஹாங்காங் வந்து சேர்ந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு குரங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/384&oldid=1275050" இலிருந்து மீள்விக்கப்பட்டது