உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4盟5 லங்கள் நகர்த்தினன். அசாய் மட்டும் இங்கு இருந் திருந்தால், ஒரே விடிையில் பெஞ்சுப் பலகையை அகற்றிவிட்டிருப்பான் என்று ஃபான் எண்ணினன். 'ஊம், இப்போது இழு!” என்ருன் ஃபான். க்வென் பெஞ்சுப் பலகையை வெளியே இழுத் தான். - ஃபா ன் அதை ஒரு தள்ளுத் தள்ளின்ை; சவப் பெட்டி அப்படியே தரையில் படாரென்ற சத்தத் தோடு அதிர்ந்து விழுந்தது. 'ஐயோ!....உங்களுக்கு ஏதாவது கேட்டதா?” 'இல்லையே!” 'நான் ஒரு குரலைக் கேட்டேன்.” 'உன்னுடைய கற்பணுசக்தி அபாரம்!” ஒரு சிறுவளுேடு சேர்ந்துகொண்டு எதையோ திருடிக்கொண்டிருக்கும் காரியம் ஓரளவு சிறு பிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் இருப்ப தாகத் தோன்றியது ஃபானுக்கு; என்ருலும், இரண்டு விசுப்பலகைகள் அவனுக்கு அவசியம் தேவைப்பட்டன. - ஆளுக்கொரு பெஞ்சுப் பலகையைத் தூக்கிக் கொண்டு, குழுவினரைப் பேருவகையில் ஆழ்த்தும் வகையில் திரும்பிச் சென்ருர்கள். பெஞ்சுப் பலகை களை பாறைகள்மீது மோதிப் பிளந்தார்கள். சீக்கிர மாக நெருப்பு மூட்டப்பட்டு கட்டைகள் படபட வென்று வெடித்து எரிந்தபோது ஈரமான குச்சிகளை வாரி நெருப்பில் வீசினர்கள். அப்போது பிற்பகல் கிட்டத்தட்ட மணி மூன்று ஆகியிருந்தது. குளிர் நிறைந்த அந்த அக்டோபர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/415&oldid=753005" இலிருந்து மீள்விக்கப்பட்டது