உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416


பருவத்திற்கு நெருப்பு இதமாக இருந்ததைப்போல் மற்றக்காலத்தில் இருந்ததில்லை. லெ ய் வா வு ம் ஃபானும் தீ அணையாமல் எரித்துக்கொண்டிருந் தனர். நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்போது நிறைய கிளைகளையும் இலைகளையும் வாரி அதில் வீசி ஞர்கள். மரப் பட்டைகளின் சுரீர் சுரீர் என்று போடும் சத்தத்தையும் இலைகளின் படபடவென்று வெடிக்கும் சத்தத்தையும் அனுபவித்துக்கொண்டு எல்லோரும் அதைச் சுற்றிலும் நின்ருர்கள். தந்தை அணிந்திருந்த தன் கோட்டைக் கழற்றி விட்டு, அவரை நெருப்பின் அருகே நிற்கும்படியும், நனைந்துபோன மேலங்கியின் கைகளைக் காயவைக்கும் படியும் ஈஸு சொன்னுள். அவன் ஒரு பக்கமாக அமர்ந்துபோதுமான அளவுக்கு குளிர் காய்ந்தான். பிறகு தன் முதுகை நெருப்பின் வசமாகத் திருப்பிக் கொண்டான். ஸ்வாட்டும், ஸ்ப்ரெளட்டோடு நின்று அம்மாதிரியே செய்துகொண்டிருந்தாள். 'இப்போது எப்படி இருக்கிறீர்கள், அப்பா?" என்று கேட்டாள் ஈஸ்", 'மிகவும் நல்லபடியாக இருக்கிறேன்” என்ருன் அவன். அவன் களைத்துப் போயிருந்ததையும் குளிரினல் அவன் முகம் சுருங்கிப் போயிருந்ததையும் அவளால் காண முடிந்தது. - 'நாம் இப்போது திரும்பிவிட வேண்டும்” என்ருன் ஃபான். ஜேம்ஸையும் மற்றவர்களையும் சைசாம் கண்டுபிடிக்க வேண்டிய இடம் எவ்வளவு தொலைவில் இருந்தது என்பது பற்றி அவர்களுக்கு ஒரு விவரமும் புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/416&oldid=1275068" இலிருந்து மீள்விக்கப்பட்டது