பக்கம்:இலட்சிய பூமி.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42? விடிவதற்குச் சற்று நேரத்துக்கு முன்பு சாலை யின் வழியாக வந்துகொண்டிருந்த கூட்டத்தினரை தாங்கள் எப்படிச் சந்தித்தோம் என்பதை ஜேம்ஸ் விளக்கினன். அவனும் அவன் சகாக்களும் அவ்வழி யாகத் தப்பிச்செல்லும் அகதிகளை கவனிப்பதற் காகப் புதர் மறைவில் ஒளிந்திருந்தார்கள். வானத் தில் நிலவு பால்போல் காய்ந்தது. அவர்கள் யதேச் சையாக சிரித்துக்கொண்டும் இரைந்துகொண்டும் நடந்து வருவதாக ஜேம்ஸ் கருதினன். சாங்ஃபூ சில போக்லோ ஆட்களை அடையாளம் புரிந்துகொண்டு அவர்களிடம் பேசச் சென்ருன். அவர்கள் சாங்பூவை தங்களோடு சேர்ந்துகொள்ளுமாறு சொன்னர்கள். சாங்ஃபூ, ஜேம்ஸ் வெளியே வருவதற்காக சீழ்க்கை ஒலி எழுப்பினன். அவர்கள் அவனுடைய துப்பாக் கியைப் பார்க்க விரும்பினர்கள். அவர்களிடமும் ஏழு துப்பாக்கிகள் இருந்தன. எதிர்மாருன முறையைக் கையாளும் மாறு பட்ட கருத்துடைய குழுவினராக இருந்தார்கள் அவர்கள் கூட்டம் இராணுவ முறையில் அமைக்கப் பட்டிருந்தது. முடிந்தால் தந்திரத்தின் மூலமாக வும், அவசியம் ஏற்பட்டால் நேரிடையாக ரோந்துப் படையினருடன் கைகலப்பதென்றும் அக்குழு தீர்மா னித்திருந்தது. அவர்கள் எல்லோருமே அநேகமாக சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வந்தவர்கள். பிங் ஷான் மாகாணத்திலுள்ள அரசாங்கப் பண்ணையில் செயலாற்றிய மூன்று சமிஷனர்களால் அக்குழு அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. எந்த மார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/427&oldid=753018" இலிருந்து மீள்விக்கப்பட்டது