உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428


மாகத் தப்புவது என்பதுபற்றி அந்தக் கமிஷனர்கள் மாதக்கணக்கில் ஆலோசித்து திட்டமிட்டிருந்தனர். அவர்களுடைய தலைவர்கள் ஹலிவாங்கும் மற்றுமொரு வளர்ந்த ஆளான சூடாதா என்பவ னும் ஆவர். இருவரும் ராணுவப் பயிற்சி பெற் றிருந்தனர். ஆட்களை பன்னிரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூன்று அணிகளாகப் பிரித்து ஒவ்வொரு அணியும் ஒர் அணித்தலைவரைக் கொண்டிருந்தது. தப்பிச்சென்ற அகதிகள் பலர் தாம்ஷ்யு-பிங்ஷான் பரப்புக்களில் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்கள். செயல் முறைகள் ஆராய்ந்து கவனமாகத் திட்ட மிடப்பட்டிருந்தன. ஈட்டிகள், கட்டப்பாறைகள், மண்வெட்டி பிகாசிகள், நீண்ட பிடியுள்ள மண் வெட்டிகள், துப்பாக்கிகள் ஆகியவை மாகாணப் பண்ணையிலிருந்து திருடிக்கொண்டு வந்து நகரத் திற்கு வெளிப்புறத்தில் மறைத்து வைத்திருந்தார் கள். சமயம் கிடைத்ததும் பிங்ஷானிலிருந்து நழுவி தங்களுடைய ஆயுதங்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு நேரே கோலநட்டை நோக்கி இரவோடு இரவாக நடந்தார்கள். அவர்களுடைய திட்டப்படி ஹாங்காங்கை இருபத்தி நான்கு மணி நேரத்தில் அடைய வேண்டும்! தனித்துக் காணப்பட்ட ரோந் துப்படையினரால் அவர்சளுக்கு எவ்வித கஷ்டமும் நேராது."எதிரி ஒன்றுசேரும்பொழுது பிரிந்துவிடுங் கள்...எதிரி பிரியும்போது தாக்குங்கள்! பலமான ஆயுத தாக்குதலை ஆயுதமற்றுச் சமாளியுங்கள்! சாதாரண தாக்குதலை ஆயுதம் கொண்டு தாக்கி முறியடியுங்கள் எதிரி முன்னேறும்பொழுது, நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/428&oldid=1275077" இலிருந்து மீள்விக்கப்பட்டது