உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429


பின்வாங்குகிருேம். எதிரி பின்வாங்கும் நேரத்தில் நாம் தொடர்கிருேம்!” என்று சூடாதா சாங்ஃபூவுக் கும் ஜேம்ஸுக்கும் விளக்கியிருந்தான். 'நாம் உச்சியில் சந்திப்போம். கீழே இறங்கும் பொழுது நூறு கெஜங்களுக்கு அப்பால் மூன்று திக்கு களிலும் பிரிந்து செல்லுவோம். நமது ஆட்கள் ஏழு துப்பாக்கிகளையும் மேற்கொண்டு தங்களுக்குக் கிடைக்கக்கூடிய மற்ற எல்லா ஆயுதங்களையும் கொண்டு தாக்குவரர்கள்! ரோந்துப்படையினர் நீண்ட தூரத்திற்கு இங்குமங்குமாகப் பரவியிருக் கிருர்கள். அநேகமாக அவர்கள் எதிரிகளின் எண் ணிக்கை தங்களை மிஞ்சியிருப்பதைக் காணும் பொழுது பீதியடைந்து ஓடிவிடுவார்கள். ஒவ்வொரு ரோந்துப்படையிலும் ஏழு அல்லது எட்டுக்கு மேல் ஆட்கள் இல்லை. நாம் நடுவில் ஒருவனைப் பிடித்து விட்டால், இரு பக்கங்களிலிருந்தும் அவர்களைச் சூழ்ந்துவிடலாம். அவர்கள் ஒரு முனையில் பிடிபட் டால் போதும் தங்களின் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள பயந்து ஓடிவிடலாம்." "எங்களுக்கு உங்களுடைய துப்பாக்கி தேவைப் படுகிறது” என்று சூடாதா தன் கைகளை நீட்டிக் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுடன் சேர்ந்து தானும் தன்னுடைய துப்பாக்கியை வைத்திருத்தல் நலம் என்று எண் ணினன் ஜேம்ஸ், "மேலும் எங்களுக்கு இன்னெரு கைக்கடிகாரம் தேவைப்படுகிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/429&oldid=1275078" இலிருந்து மீள்விக்கப்பட்டது