உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 ஈஸுவும் ஃபானும் தங்களிடம் கைக்கடிகாரங் களை வைத்திருக்கிருர்கள் என்று தெரிந்துதான் ஜேம்ஸ் தன்னுடைய கைக்கடிகாரத்தைக் கொடுத் தான். - ஃபான் அமைதியாக அமர்ந்து உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான். 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட் டான் ஜேம்ஸ். - "அது சரி, ஆனால் நாம் திட்டமிட்டிருந்ததற் கும் இதற்கும் வெகுதூரம்?” "இதில் ஆக்ஷேபனை ஏதாவது உண்டா? அவர் கள் நாளை இரவு புறப்படப் போகிருர்கள். இனி அவர்கள் தாமதிக்க முடியாது. தங்களை யாராவது கண்டு பிடிக்கப்படு முன்னுல் அவர்கள் தப்பிப்போய் விட விரும்புகிருர்கள்.” ஃபான் சாதத்தை மென்றுகொண்டிருந்தான். பிறகு தன் மீசையைத் துடைத்த வண்ணம் உமிழ்ந் தான். - - "நான் நம்முடன் உள்ள பெண்களையும் குழந் தைகளையும்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் இந்தச் சண்டையில் மாட்டிக்கொள்வதை நான் விரும்பவில்லை. நமது திட்டம் எவ்வித ஹிம் சையுமின்றி நிசப்தமாக சல்லிசாக நடைபெற வேண்டும்.” 'நீ என்ன சொல்கிருய்?' என்று ஜேம்ஸ் ஈஸ்வை நோக்கினன். - - "என் தந்தையும் பையன்களும் இம்மாதிரி ஆபத்துக்கு உள்ளாக வேண்டுமென்று நான் நினைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/430&oldid=753022" இலிருந்து மீள்விக்கப்பட்டது