உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

431


வில்லை. நமது ஆட்கள் ரோந்துப்படையினரைக் காட்டிலும் பலசாலிகளாகவும் அதிக எண்ணிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிரு.ர்கள் என்பதை அறிய சந்தோஷம்தான். என்ருலும் அகலமான இந்த நதியை நாம் எப்படி நீந்திக் கடக்கப்போகி ருேம்? "நான் அறிந்த வரையில் சம்சன் நதி இந்த முனையில் அவ்வளவாக ஆழமில்லை; அநேகமாக இரு பது அல்லது இருபத்தைந்தடி அகலமிருக்கலாம். கரையின் இருமருங்கிலும் முள்கம்பி வேலிகள் சிறிது தூரம்வரை இருக்கின்றன; நம்மை யாரும் பார்த்து விட்டாலொழிய நதியைக் கடந்து செல்வது. அவ்வ ளவு கடினமான காரியமல்ல." புதிய ஆட்களில் ஒருவனை மாவோபெங் பக்கக்தில் நின்றுகொண்டிருந்தான். மூன்று மாஜி கமிஷனர்களிலே அவன் ஒருவன். தனது பழைய கறுப்பு நிற சுங்ஷான் ராணுவ உடுப்புக்கு வெளியே உள்ள தோலுறையில் துப்பாக்கி வைத்திருந்தான். இருந்த போதிலும், அவனது உயரமான, மெலிந்த தோற்றம் ஓரளவு இராணுவ இயல்பைக்காட்டிலும் சிறந்த ஒர் அறிஞனின்தோற்றத்தையே காட்டியது. லேசாக புன்னகை செய்தான்! அவன். 'அபாயத்திற்கேதுவான காரியங்களை நாங்கள் மேற்கொள்ளவில்லை. எங்கள் ஆட்களிடம் கடப் பாறைகள், மண்கோடரிகள், பிக்காசுகள், நீண்ட பிடியுள்ள மண்வெட்டி எல்லாம் இருக்கின்றன. ஆற்றின் குறுக்கே வீசி மறுகரையில் கட்ட கயிறு களும் வைத்திருக்கிருேம்.” - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/431&oldid=1275079" இலிருந்து மீள்விக்கப்பட்டது