உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432


இந்தத் திட்டத்தால் அசாய் பரபரப்படைந் தான். "கவலைவேண்டாம். அந்தப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நான் உதவி செய்கிறேன். நாம் சற்று அப்பால் தள்ளி ஒதுங்கி நின்று சமயம்பார்த்து குறுக்கே பாய்ந்து ஆற்றைக் கடந்துவிடுவோம். இரண்டு பையன்கள் மட்டுந்தானே இருக்கிருர்கள். அவர்களை நான் கவனித்துக்கொள்கிறேன் என்ருன்” அசாய் 'நீ உன்னைப் பெரிய ஆளாகக் கணக்கிட்டுக் கொண்டுவிட்டாயா?, என்ன?’ என்று கேட்டான் ஃபான். - “நிச்சயமாக நான் உங்களில் யாரையும்விட வேகமாக ஒடித் தப்பித்துவிட முடியும்!” ஜேம்ஸும் ஈஸுவும் உள்ளூரச் சிரித்துக்கொண். டார்கள். - 'அந்தப் பையன் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டான் என்பது எனக்குத் தெரியும்." 'நாம் அவனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்ருன் மாவோபெங். "நீங்கள் மா-ஸ்ே-துங்குக்கு உறவா?” 'இல்லை. ஆனல் நான் ஹஅனைச் சேர்ந்தவன்.” 'சென்ற இரவு இந்த கமிஷனர்களின் பெயரைக் கேட்டபொழுது, இங்கே நமது குழுவிலும் கூட அது போலவே ஒரு சூ”வும் ஒரு 'மா'வும் இருக்கிருர் களே! என்று நினைத்துக் கொண்டேன்' என்ருன். அசாய், பிறகு குரலை மாற்றிக்கொண்டு பன்றியைப் போலவும் பூனையைப் போலவும் சத்தம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/432&oldid=1275080" இலிருந்து மீள்விக்கப்பட்டது