பக்கம்:இலட்சிய பூமி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 காட்டினன். சூடேயையும் மாசேதுங்கையும் அடை யாளம் காட்டப் பொதுமக்கள் கண்டுபிடித்த ஒரு கேலிக்குரல் இது. 'உன் வாயை மூடு” என்று கூறி தன் கையை ஓங்கினன் மாவோபெங், அசாய் ஏய்த்துவிட்டு ஓடி விட்டான். தான் முதலில் சென்று சுற்றிலும் ஒரு நோட்ட மிடப் போவதாக சைசாம் கூறினன். அவன் அசாயையும்தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பி ன்ை. ஆரம்பத்திலிருந்தே அவன் அசாயை விரும்பி ன்ை; காரணம் அவன் மிகவும் புத்திசாலி, கூர்மை யான அறிவுள்ளவன், சாமர்த்தியமும் விழிப்பும் உள்ளவன் என்று நினைத்தான். “உங்களுடைய வருகைக்காக என்னுடைய நண்பனைத் தயார் செய்யப்போகிறேன். உங்களில் பலபேர் அங்கே இருக்கிரு.ர்கள். ஆனால், சிறிது தூரத்தில் மிகவும் பாதுகாப்பு மிகுந்த ஆலிவ் மரத் தோப்பு ஒன்று இருக்கின்றது. நடுவே தங்குவதற்கு அது சிறந்த இடமாக அமையும். ரோந்துப்படை யினர் அநேகமாக பதினுேரு மணிக்குத்தான் அந்த வழியாகச் செல்கிருர்கள். அது இங்கிருந்து ஏறக் குறைய ஒரு மணிநேரத்தில் சேர்ந்துவிடக்கூடிய இடமாகும். பகல் நேரத்தில் அதைக்காட்டிலும் குறுகிய நேரமே பிடிக்கும். அங்கிருந்து உச்சிக்குச் செல்ல இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்கலாம் நீங்கள் புறப்படுவதற்கு முன்னல் நாங்கள் திரும்பி வந்துவிடுவோம்.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/433&oldid=753025" இலிருந்து மீள்விக்கப்பட்டது