பக்கம்:இலட்சிய பூமி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435


கைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தாம்ஷாரிய வட்டத் தில் எங்களைப் பிரிந்து விட்டார்கள். அவர்கள் சிறந்த சண்டை வீரர்கள்: கடற் கொள்ளைக்குப் பெயர் போனவர்களென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஹவாங்கும் சூபாதாவும் அரசாங்கப் பண்ணைக்கு வந்து சேர்ந்த நாள்முதலாக, அதாவது நான்கு மாதகாலமாக நாங்கள் இதைத் திட்டமிட்டு வரு கிருேம். ஆட்களில் சிலரை பகலில் வேலை செய்ய வரு கிறவர்களைப் போல் கடத்திவந்தோம். மாஜி கமிஷனர்கள் என்ற காரணத்தால் மாகாணப் பண். ணையில் மிகவும் பொறுப்பான ஸ்தானங்கள்-அதி லும் முக்கியமாக-அலுவலக வேலை எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. சிலரை வாசல் காவலர்களாகக் கூட நாங்கள் நியமித்தோம்.” 'நீங்கள் ஏன் தப்பிச்செல்ல விரும்புகிறீர்கள்? நாட்டுப்புறத்துக்கு அனுப்பப்படுவதன் காரண மாகவா?” தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எல்லோரும் தவறு செய்கிரு.ர்கள். அதற்காக எல் லோரையும் த ண் டி க் க வேண்டும் என்பதல்ல முறை-அது சரியான முறையும் ஆகாது." "சரி! அவைகளெல்லாம் கடந்துபோன விஷயம். நாங்கள் வெளியேறத் தீர்மானித்தோம். எங்கே என்பது பற்றி அக்கறையில்லை! எங்கு நாம் உழைக்க முடியுமோ, எங்கு நாம் முட்டைக்கோசைப் பயிரிட்டு அதனுடைய தலைபாகத்தைக் கையில் பிடித்து இது என்னுடையது'என்றுகூறஅனுமதிக்கப்படுகிருேமோ அங்கு செல்ல விழைகிருேம். இப்பொழுது இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/435&oldid=1275082" இலிருந்து மீள்விக்கப்பட்டது