உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


குரலை அவர்கள் கேட்டார்கள். கேள்விகள் கேட்ட வண்ணம் ஆடம்பரமான சத்தத்தோடு கடுமையாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கும் நடையுடன் குரலை உயர்த்தி நம்பிக்கையிழந்த தன்மையில் பேசி ஞன். இது அவனுக்கு வழக்கமானது. "இப்போது நீங்கள் உங்களது வேலைக்குத் திரும் புங்கள். உரத்துக்குப் பொறுப்புக் கொண்ட இரா ணுவப் பகுதிகள் நகரத்தின் உள்ளேயும் வெளியே யும் நியமிக்கப்பட்ட பிரதேசங்க ளில் வேலையைத் தொடங்கும். மகளிர் இராணுவக் குழுக்கள் வழக் கம்போல கூடிப் பணிகளைத் தொடருவார்கள், எல்லாவிதமான இயற்கை உரங்கள் பொதுவுடை மைப் புனர் நிர்மாண விநியோகக் கிடங்குக்குக் கொண்டுவரப்பட வேண்டும். பையன்கள் பள்ளிக் குச் செல்லும்போதும் இவ்வகையில் கடமை புரிய வேண்டும். ஒரு உறுதிப்பாடுடன் அவர்கள் செய் வார்களாக இது உர வருஷம்! சுற்றிலும் இன்னும் ஏராளமான பன்றி-கோழித் குஞ்சுகளின் கழிவுப் பொருள்கள் கிடக்கின்றன. பொதுவுடமைப் புனர் நிர்மாணத்துக்கும் பெரும் பாய்ச்சல் முன்னேற்றத் துக்கும் அவை நமக்கு அவசியப்படுகின்றன. இரவில் சேரும் அழுக்குகளையும் அசுத்தங்களையும் நஷ்டப் படுத்தாமல் சேகரிக்க மறந்துவிடாதீர்கள்! பெரும் பாய்ச்சல் முன்னேற்றத்தை உருவாக்குங்கள் தலை வர் ம்ா நீடுழி வாழ்வாராக!...” டெங்பிங் பேசி முடித்தான். பையன்களின் தலைவன் ஊதுகுழலை ஊதினன். பையன்கள் தங்களுடைய கூடைகள் கைப்பைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/44&oldid=1274822" இலிருந்து மீள்விக்கப்பட்டது