உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446


அசாய் தானகவே ஒரு கோப்பைத் தேநீர் தயார் செய்துவிட்டான். - "யாருக்காவது தேநீர் வேண்டுமா? மிகவும் நன்ருக இருக்கிறது!” மாவோ முறையான வழியில், காவலாளிகளின் ராணுவ உடுப்புகளைக் களைந்து, அந்த அறையிலிருந்த பொருள்களையெல்லாம் சோதனை செய்தான். அங்கு நாட்குறிப்புடனும் சில தொலைபேசி எண்களுடனும் ஒரு நிகழ்ச்சிநிரல் புத்தகம் இருந்தது. ஷான்டங்கில் இறந்த மனிதர்களில் ஒருவனுடைய மனைவிக்கு எழுதப்பட்ட ஒரு முற்றுப்பெருத கடிதம், ஏற் கெனவே விலாசம் எழுதப்பட்டு தபால்தலை ஒட்டப் பட்டிருந்த உறையில் இருந்தது. மற்ருெருவனின் உடலில் பெயர் எழுதப்பட்ட அட்டைகள் கொண்ட சிறு நோட்டுப் புத்தகமும் ஒரு பேனவும், ஒரு ஸ்திரீ, குழந்தை ஆகியோரின் புகைப்படமும் இருப்பதை மாவோ கண்டான். வறுத்த அரிசி நிறைந்த ஒரு பையையும் ஜேம்ஸ் பார்த்தான். 'பாவம் இவர்களுக்கும் தின்பதற்கு இதைத் தவிர ஒன்றும் கிடைப்பதில்லை போலிருக்கிறது. அவர்களுடைய காலணிகளைப் பார். அதன் அடிப் பகுதிகள் பிய்ந்துவிட்டன. . . ஜேம்ஸ் தன் கைகளைக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளும்போது,அவை ஈரப்பசையுடன் இருந்ததை உணர்ந்தான். . 'அவன் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தை என்னிடம் கொடு. நான் அதை ஹாங்காங்கிலிருந்து தபாவில் அவளுக்கு அனுப்ப விரும்புகிறேன்” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/446&oldid=1275090" இலிருந்து மீள்விக்கப்பட்டது