உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44? கூறினன் அவன். அதனுள் கொஞ்சம் பணத்தையும் வைத்து தான் அவளுக்கு அனுப்பப் போவதை அவன் கூறவில்லை. அப்பொழுது எல்லாம் தயாராக இருந்தது. காவல் நிலையத்தில் அமைதியாக நடமாடிக்கொண் டிருந்த உருவங்களின் நிழல்களை குழுவைச் சேர்ந்த பெண்களும் பையன்களும் தாங்கள் இருந்த இடத்தி லிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இப்போது அவர்கள் வெளியே வந்துவிட்டனர். ஜேம்ஸ் இரண்டு மழைச் சட்டைகளையும் இரண்டு போர்வைகளையும் எடுத்துக்கொண்டு அவர்களுடன் வெளியே வந்து கொண்டிருந்தான். “அவைகளை என்னிடம் கொடுங்கள்' என்று மாவோபெங் கூறினன். 'நீ அவற்றை விரும்புகிருயா? அந்த மழைச் சட்டைகள் பெண்களுக்கு செளகரியமாக இருக்கு மென்று நினைத்தேன்." "நான்தான் இங்கே தளபதி. நீங்கள் அதுபற்றி முதலில் என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். நீங்கள் இஷ்டப்பட்டால் மழைச் சட்டைகளைப் பெண்களுக்குக் கொடுத்து விடுங்கள்.” ஜேம்ஸ் போர்வைகளை மாவோவிடம் கொடுத் தான். அவர்கள் துப்பாக்கிகளை யெல்லாம் ஒன்று சேர்த்து எடுத்துக் கொண்டு விளக்கை அணைத்து விட்டு, வெளியிலிருந்து கதவைத் தாழ்ப்பாளிட்டு, அவ்விடத்தைவிட்டு நீங்கினர்கள். 'நாம் பேசியதை யாராவது கேட்டிருப்பார்க ளென்று நான் நினைக்கவில்லை. இன்னும் ஒன்றிரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/447&oldid=753040" இலிருந்து மீள்விக்கப்பட்டது