உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

491


குழுத் தலைவர்கள் தங்கள் ஆட்களை ஒவ்வொரு வராக அழைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா ஆயுதங்களும் தரைமீது வைக்கப்பட்டு எண்ணப் பட்டன; கைத்துப்பாக்கிகள் தரையில் வரிசையாகக் ஹவாங்குக்கு முன்னல் வைக்கப்பட்டிருந்தன. முதலில் எல்லோருக்கும் கைத்துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டன; ஆட்கள் எல்லோரும் வட்ட மாக நின்ருர்கள்; இரண்டு கவைக்கம்புகளும் மண் கீறும் பிக்காசியும் ஷகுண்டாக் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டன; அவர்கள் அவைகளை சிரித்துக் கொண்டே பெற்றுக்கொண்டார்கள். ஃபானே உற்றுப் பார்த்தான் ஹாலிவாங்; அவனிடம் ஒரு தலைப்பாகையை நீட்டினன். 'இதோ இது உன்னுடையது.' பெயர்ப் பட்டியலை பார்த்து மீதமிருந்த தலைப் பாகைகளை இளைஞர்களுக்கு வழங்கினன். "நான் என்னுடைய கத்தியை வைத்துக் கொள் ளலாமா?’ என்று ஹைலோக் ஃபாங் ஆட்களில் ஒருவன் கேட்டான். - "அவசியம் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்” என்று கத்தியை அவனிடம் திரும்பத் தந்தனர். - "என்னுடையதை என்னிடம் கொடுங்கள்!" என்று இன்னொருவன் சொன்னன். மூன்று செம்படவர்களும் தலைப்பாகைகளையும் கத்திகளையும் வைத்திருந்தார்கள். மற்றவர்களுக்கு மண்வெட்டிகளும், பில்கீறியும் கொடுக்கப்பட்டன. அவர்களில் சிலர் தலைப்பாகை அணிந்து பிக்காசியை ஏந்தி நின்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/491&oldid=1275126" இலிருந்து மீள்விக்கப்பட்டது