பக்கம்:இலட்சிய பூமி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492


உள்நாட்டில் செய்யப்பட்ட சைக் குண்டுகள் அடங்கிய ஒரு கறுப்புப் பொட்டலத்தைப் பக்கத்தில் வைத்திருந்தான் சூடாதா, 'அவற்றில் ஒன்றை நான் வைத்துக்கொள் ளட் டுமா?” என்று அசாய் வினவினன். 'இல்லை; உனக்கு வேண்டாம், உன் தலைப் பாகையை சரியாக நீ வைத்துக் கொள்.' 'சரி இப்போது கேளுங்கள், உங்கள் பெயர்களை நான் கூப்பிடுங்கால், நீங்கள் வரிசையாக வந்து நிற்க வேண்டும் !" என்ருன் சூடாதா. ஆட்கள், மூன்று குழுக்களாகப் பிரிந்துநின்றனர். 'முதல் குழுவை நான் வழி நடத்திச்செல்வேன். மிஸ்டர் ஹவாங் மத்தியக் குழுவுக்கு வழி காட்டு வார்; மிஸ்டர் மாவோபெங் பெண்களும் சிறுவர் களும் உள்ள பின்பகுதியைக் கவனித்துக் கொள் வார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அணியின் தலைவரைப் பின் தொடர வேண்டும். இதில் தவறு ஏற்படக்கூடாது; கடமையில் தவறவும் கூடாது. சண்டை ஆரம்பமாகும்போது, குழப்பம் அடைந்து விடாதீர்கள். உங்கள் தலைவர் நகர்ந்து செல்லும்படி உத்தரவிடும்வரை, நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு நகரக்கூடாது. நாம் புதரில் பதுங்கி எதிரியை ஏமாற்றிப் பிடிக்கப் போகிருேம்; அத்துடன் குறித்த நேரத்தில் செயற்படுவது முக்கியமானது!........ 'இன்றிரவு அநேகமாக கை கலப்புச் சண்டை ஒன்று நடக்கும். ஒவ்வொரு நிலையிலும் உங்கள் தலைவர்கள் ೯Tಣಿ: T செய்வதென்று உங்களுக்குச் சொல்லுவார்கள், இந்தக் கறுப்புத் தலைப்பாகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/492&oldid=1275127" இலிருந்து மீள்விக்கப்பட்டது