உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 24 மரங்களின் நிழல்கள் கிழக்குச் சரிவுவரை நீண்டிருந்தன. சூரியன் மறைய மறைய கண்ணுக்கு இனிமையாக நிழலும் நீண்டுகொண்டிருந்தது. அப் பரந்த நிழலில் கோஷ்டியினர் வந்து அடங்கினர். கோலநட்டின் சிகரம் மட்டும் நிழல் படியாமல் கீழே மங்கிய ஒளியைப் பரப்பிக் கொண்டு இருந்தது. அரைமணிநேரம்வரை அவர்கள் நிழலைக் கண்டு களித்தனர். கூட்டத்தில் மயான அமைதி நிலவியது. பேசியவர்கள் கூட லேசாக முனு முணுத்தார்கள். அவர்கள் ஏற்கனவே கோஷ்டிகளாகப் பிரிக்கப்பட் டிருந்தனர். பொறுமையிழந்த விவசாயிகள் சிலர் தங்களுடைய கைகளை மண் வெட்டிக் கணைகளில் முட்டுக் கொடுத்த வண்ணம், நின்று கொண்டிருந் தனர். தலைவர்கள்.... அவ்வப்போது அவர்களைக் குழப் பத்தோடு நோக்கிய வண்ணம் நிம்மதியிழந்து காத் திருந்தனர். ஒவ்வொருவர் கழுத்திலும் ஒர் ஊதல் தொங்கிக் கொண்டிருந்தது. சிலர் தங்கள் விரலின் நகங்களைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். மலையுச்சியின் மேல் சூரிய ஒளி கடைசியாக பிரகாசித்த பொழுது, அவர்க ளிடையே முனு முனுப்பு எழுந்தது. ஹவாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/494&oldid=753092" இலிருந்து மீள்விக்கப்பட்டது