உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

495


வானத்தை நோக்கி, குழுவினரை விளித்தவாறு, 'நாம் இப்போது புறப்படுகிருேம். ஒவ்வொரு கோஷ் டியும் தன்னுடைய தலைவருக்குப் பணிய வேண்டும். அவர்களுக்குத்தான் நாம் எப்போது எங்கே செல்ல வேண்டும் என்பது தெரியும். நாம் கீழே பள்ளமான பகுதிக்கு சென்று கொண்டிருக்கிருேம்; நன்ருக இருட்டும் வரை அங்கே காத்திருப்போம். வானம் நிர்மலமாக இருக்கிறது. அங்கே சிறு நட்சத்திர ஒளி தென்படலாம். எக்காரணத்தைக் கொண்டும் பிறர் கண்ணுக்குத் தென்படுவதைத் தவிர்த்து விடுங்கள். நாம் கீழே போகும்போது முற்றிலும் நிசப்தமாக இருக்க வேண்டும். உங்கள் தலைவர்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்ட மாகச் சொல்வார்சள்" என்று கூறினன். ஈஸு ஏ குழுவிலிருந்த ஜேம்ஸை கவலையோடு நோக்கினுள். குழுத் தலைவன் சூபாதாவைப் பின் தொடர்ந்து குழு நகரத் தலைப்பட்டபோது, அவள் ஜேம்ஸுக்கு கையால் சைகை காட்டினள். அது வரையில் மிகுந்த உற்சாகத்துடன் இருந்த க்வென் பீதியடையத் தலைப்பட்டான். குழுவில் ஃபானும் சாங்ஃ பூவும் பெண்களோடு இருந்தனர். அசாய் மத்தியக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்தான். சில நூறு கஜ தூரம் கீழே சென்று, புழுதி மண்டிய கடினமான ஒரு நடைபாதையை அடைந் தார்கள் அவர்கள். குழுவினர் ஐம்பதிலிருந்து எழுபது கஜங்கள் இடைவெளி விட்டு பிரிக்கப்பட் டிருந்தபோதிலும், விஷயங்கள் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகவே இருந்தனர். மாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/495&oldid=1275128" இலிருந்து மீள்விக்கப்பட்டது