உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496


ஒளியை இருள் விழுங்கிக்கொண்டிருந்தது. அந்த மங்கும் இருளில் அவர்கள் செங்குத்தான மலைப்பகுதி களைச் சூழ்ந்தனர். அவர்கள் மேலும் மேலும் கீழே சென்று கொண்டிருந்தனர். இப்பொழுது தாங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிருேம் என்பதே அவர் களுக்குத் தெரியவில்லை. வழியில் பிரிந்துவிடாமல் இருப்பதற்காக, ஒவ்வொருவரும் முன்னுல் சென்று கொண்டிருந்தவர்களைப் பின்பற்றி மிகவும் கஷ்டப் பட்டு நடந்தார்கள். சிலர் கால் இடறி விழுந்தனர். ஃபான் தன் கைகளால் ஒரு பக்கத்தில் லெய்வா வையும் மற்ருெரு பக்கத்தில் க்வென்னையும் இறுக்க மாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அந்த அனதைச் சிறுவன் மிகவும் பயந்திருந்தான்; பொங்கிவரும் விம்மலை அடக்கிக்கொண்டு அடிக்கொருதடவை விசும்பிக் கொண்டிருந்தான். அநேகமாக இந்த இடத்தில்தான் அவன் தனது பெற்ருேர்களை இழந்து விட்டிருந்தான். ஈஸ் தன் தந்தையை கவனித்துக் கொண்டாள். ஸ்வாட்டிடம் சிறுவன் ஸ்ப்ரெளட் ஒப்படைக்கப்பட்டான். - மற்றக் கூட்டத்தினர் பார்வையை விட்டு மறைந்து விட்டார்கள் கீழே எங்கிருந்தோ மெல்லிய காலடிச் சத்தம் கேட்டது. பாதை குறுகியிருந்த துடன் ஒரு பக்கத்தில் அகன்ற செங்குத்தான பாறை அனுகூலமாயிருந்ததால், கூடியவரையில் அவர்கள் ஒரே வரிசையில் சென்றனர். - - வழி திடீரென்று கீழிறங்கியது. அங்கு சிக்கலான ஒரு. திருப்பம் வந்தது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/496&oldid=1275129" இலிருந்து மீள்விக்கப்பட்டது