உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49? 'ஜாக்கிரதையாக, மெதுவாகச் செல்லுங்கள்,” என்று மாவோ பெங் கிசுகிசுத்தான். இதுதான் என்ட்செய் எனப்படும் தூக்கணங் குருவிச் செங்குத்துப் பாறை, அங்கிருந்த கரடு முர டான நடைபாதையில் பகல்வெளிச்சத்தில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் பக்கவாட்டில் ஒதுங்கிச் செல்லும் அளவுக்குத்தான் அது இருந்தது. பாறை கீழ்நோக்கி சுமார் ஐம்பது அடிவரை தொங் கியது. நடை பாதை வழுக்கும்போல் இருந்ததால், முன்னலிருந்த குழுவினர் ஒரு மரத்தின் அடிப் பாகத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டே கீழே இறங்கினர். மத்தியக் குழுவின் கடைசி மனிதன் கயிற்றின் அடிப்பகுதியை வந்தடைந்தபோது, ஈஸுவின் குழு வந்து சேர்ந்தது. மாவோ பெங் சற்றே நின்றன். பின்னலிருந்து விவரமின்றி ஒருவரை ஒருவர் தள்ளினர்கள். ஹைலோக்ஃபாங் செம்படவர் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினர். பெண்களைப் பொறுத்தவரை கயிற்றினல் ஒரு உபயோகமும் இல்லை. "என்னைப் பின் தொடருங்கள். நாம் பாதை வழியே கீழே செல்லுவோம்," என்று மாவோபெங் சொன்னன். க்வென் தன்னுடைய பெற்றேர்களே. இழந்த அந்த இடத்தைக் கடந்தபொழுது, தன்னை யும் மீறிய திகிலினல் நடுங்கி அழுதுவிட்டான். 'நீங்கள் அவனைப் பிடித் துக்கொள்ளுங்கள்." என்று ஸ்வாட் தன் கணவனிடம் கூறிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/497&oldid=753095" இலிருந்து மீள்விக்கப்பட்டது