உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498


சாங்ஃபூ சிறுவனப் பிடித்துக் கொள்கையில் தன் உடம்பு புல்லரித்து நடுங்குவதை உணர்ந்தான். "செங்குத்துப் பாறைக்கு இடதுபுறமாகச் செல் லுங்கள், நானும் உங்களோடு வருகிறேன்” என்று ஃபான் மெதுவாக டுவானிடம் தெரிவித்தான். தன்னுடைய புஜங்களில் நடுங்கும் சிறுவன அனைத்தவண்ணம் சாங்ஃபூ எச்சரிக்கையுடன் முன் ல்ை சென்ருன். டுவானும் ஈஸ்ாவும் பின்தொடர ஸ்வாட் சிறுவன் ஸ்ப்ரெளட்டோடு சென்ருள். டுவான் அப்போதும் மழைச் சட்டையை அணிந் திருந்தான். ஏனெனில். அவனுக்குக் குளிர் தாங்க வில்லை. ஈஸா, தன் தந்தைக்கு வேகமாக மூச்சு வாங்கியதைக் கண்டாள். "நீங்கள் செளகரியமாக இருக்கிறீர்களா?” என்று வினவினுள். "நான் நன்ருக இருக்கிறேன்.” ஸ்வாட் கீழே விழும் அளவுக்கு நிலைகுலைந்தாள். "அவனைப் பலமாகப் பிடித்துக் கொள்” என்று டுவான் பயத்தினல் கத்தினன். அக்கணத்தில் திடீரென்று டுவான் தனதுமழைச் சட்டை தடுக்கிக் கீழே விழுந்து, விளிம்புவரை உருண்டு சென்ருன். திடீரென்று ஒரு வாளியைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டதுபோல் கீழே தொப் பென்று சத்தம் கேட்டது. - இருள் கப்பியிருந்ததால், அது எவ்வாறு நேர்ந் தது என்று ஈஸுவால் பார்க்கமுடியவில்லை. ஃபானும் லெய்வாவும் "ஐயோ!"என்று.அலறிஞர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/498&oldid=1275130" இலிருந்து மீள்விக்கப்பட்டது