உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


சுவரில் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசி யிடம் செல்ல எழுந்தபோது, ஸிஸ்டர் ஆங்கெலிகா வின் நீல விழிகள் ஒளிவீசின. அதே சமயம் தொலைபேசியின் மணி ஒலித்தது. ஜேம்ஸ் ஆசனத்தை விட்டு எழுந்து ஒரே பாய்ச்ச சலாக முன்பக்கம் பாய்ந்தான். தொலைபேசிக் கருவியை அத்தை எடுக்கும் வரை பெருமூச்சுடன் காத்திருந்தான். "ஆமாம்....ஈஸ்"....” என்ருள் சகோதரி ஆங் கெலிகா. அவள் வாய் வார்த்தைகளை முடிக்கவில்லை. அதற்குள் அவள் கையிலிருந்து தொலைபேசியைப் பறித்துக்கொண்டான் அவன். "ஆமாம்....நான்தான்....ஜேம்ஸ். இ ன் னு ம் இரண்டொரு தினங்களிலே நான் திரும்பிச் செல்லப் போகிறேன்....டம் டம்!” அவள், 'டம் டம்” என்று பதிலளித்துவிட்டு கடகட வென்று சிரித்தது அவன் செவிகளில் விழுந்தது. ஜேம்ஸ் மீண்டும் தொடர்ந்தான்: “மீண்டும் உன் குரலேக் கேட்க இன்பமாக இருக்கிறது.இல்லை, எனக்கு இப்போது பயமே இல்லை. என் அத்தையை அழைத்துப்போக வந்தேன். இன்னும் சில நாட் களில் நாங்கள் இங்கிருந்து கிளம்பிவிடுவோம். ஒரு வேளை....ஒருவேளை....!" 3 * மூன்ரும் பேர்வழி யாராகிலும் கேட்டுக்கொண் டிருப்பார்களோ என்று பயந்து, தொலைபேசியை இருந்த இடத்தில் தொங்கவிட்டான் ஜேம்ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/50&oldid=1274827" இலிருந்து மீள்விக்கப்பட்டது