உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


"அப்படிப்பட்டவர்களை யெல்லாம் நான் ஏமாற்றிவிட்டேன். உங்களைச் சந்தித்து விடை கொடுத்தனுப்புவதற்கென்று இன்றைக்கு அவள் நிச்சயமாக வருவதாகத் தெரிவித்தாள். உண்மை யாகச் சொல்கிறேன். இந்தச் சமயத்தில் அவளைப் பார்க்க வேண்டுமென்று நான் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறேன். அத்தை, தயவு பண்ணுங்கள். அவளிடம் போய்ச் சொல்லுங்கள்!” என்று கெஞ்சி ன்ை ஜேம்ஸ். தன்னுடைய உடன் பிறந்தார் மகனைக் கபட மாகப் பார்த்தாள் ஸிஸ்டர் ஆங்கெலிகா. நாற்காலி யில் பின்புறம் தள்ளி அமர்ந்தபடி, “இன்று நான் ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டியதில்லை; ஞாபக மிருக்கட்டும்” என்று குத்தலாக சொன்னுள். 'தயவு காட்டுங்கள், அத்தை அவள் மனம் மாறிவிட்டாளா, என்ன?’ என்று கேட்டான் அவன். "அதை நீயே உணர்வாய்!” என்ருள் ஆங் கேலிகா. அவள் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது; பின் அவன் முகத்தில் தோன்றிய புன்னகையில் கருத்து நிழலாடியது. - அவள் சிறு பெண்ணுக இருந்தபோது நிகழ்ந்த காதல் விஷயம் அவளுடைய அந்த அமைதி பூத்த முகத்தின் பின்னே மறைந்து கிடந்தது!...” நீயே உணர்ந்து, நீயே கண்டுபிடித்துக் கொள்வாய்!” என்று தொடர்ந்தாள். பின்னர், திடீரென்று, 'ஆஹா எத்துணை விசித்திரமானது!...” என வாய், விட்டுக் கூறினுள் ரத்தம் முகத்திற்குப் பாய்ந்தது. பரவசப்படுத்தும் காதல் கதை ஒன்றைப் பூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/51&oldid=1274828" இலிருந்து மீள்விக்கப்பட்டது