உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


செய்த பெண்ணினுடையதைப் போன்றிருந்தது அக் குரலின் தன்மை. மேஜைமீதிருந்த அவன் கையை அவள் மெள்ளப் பற்றிக்கொண்டு, "பேராசிரியர் தாயெராகிய உன் நிமித்தம் அவளிடம் போய்ச் சொல்லுகிறேன்! ஜேம்ஸ், நீ என்னை ஏமாற்ருதே! உன்னுடைய நோய் பிடித்த அத்தையான என்னை அழைத்துச் செல்ல எனக்குத் துணையாக நீ சைனவுக்கு வந்திருக்கிருய் என்பதைப் பார்க்கிலும், உன்னுடைய சீன விஜயத் துக்கு வேருெரு சிறந்த காரணமும் இருக்கிறது. அந்தத் துப்பாக்கியை நீ ஏன் கொண்டு வந்தாய்? நான் ரொம்பவும் பயந்துவிட்டேன். சட்டவிரோத மான வியாபாரப் பிரதிநிதியென்று உன்னை அவர்கள் குற்றஞ் சாட்டுவார்களே!” - 'தெரிந்துதான், திட்டமிட்ட இந்த அபாயத் தினை நான் மேற்கொண்டேன். மாட்சிமை தங்கிய மகாராணியாரின் ஆட்சிக்கு இவ்விஷயம் எட்டினல், அவர்களும் தக்க தண்டனை வழங்குவார்கள்." தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஆழ்ந்த யோசனை யுடன் பேசலானன்: 'அத்தை, இப்போது நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண் டும். நானும் ஈஸுவும் மணம் புரிந்துகொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. இவ்வளவு காலமாக நான் காத்திருந்து விட்டேன். இங்கிருந்து அவளைக் கடத்திச் செல்லத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்.” பேச்சின் அர்த் தத்தைக் குறையச் செய்ய அவன் ஒரு வினடி நிறுத்தி விட்டுத் தொடர்ந்தான்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/52&oldid=1274829" இலிருந்து மீள்விக்கப்பட்டது