உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


'இப்பொழுது ஹாங்காங்கில் எனக்கு நிலையான தொழில் இருக்கிறது! அவளுக்கு அருகிலேயே இருக்க வேண்டுமென்றுதான் நான் ஹாங்காங்கில் தங்கினேன். அனுமதிச் சீட்டுக்காக மூன்ருண்டு காலம் காத்திருந்தோம். இம்முறை அவளை நான் அழைத்துச் சென்றுவிடுவேன். அதன் காரணமாகவே நான் துப்பாக்கியையும் கொணர்ந்தேன்.” 'அவளை எங்ங்னம் கடத்திச் செல்வது?.... 'எல்லைக்குச் செல்லும் குறுக்கு வழியாக அவளை அழைத்துப் போவேன்!" விஸ்டர் ஆங்கெலிகாவின் முகத்தில் கவலை தோன்றியது; புருவங்கள் கோபத்தால் நெரிந்தன. "எப்போதும் போலவே, வருங்காலத்தைப்பற்றி ஒரு உறுதிப்பாடு இல்லாமலேயே இருக்கிருயே!” என்ருள் அவள் தலையை ஆட்டிய வண்ணம். ஜேம்ஸின் உதடுகள் வளைந்தன; ரகசியமான புன்சிரிப்பு முகத்தில் மிதந்தது. "இச்செயலில் கஷ்டமின்றி வெற்றி பெற்றுவிடுவேன்!” என்று சந்தோஷமாக ஜாடை செய்தவாறு கூறினன். "உன்னல் எப்படி முடியும்? சொல்லேன்!....உன் புத்தி பேதலித்துவிட்டதா, என்ன?” - 'இல்லை, இல்லை உள்ள நிலைமையை நான் பூரணமாகப் புரிந்துகொண்டேன்; வெற்றியடைந்த ஜனங்களுடன் பேசினேன்; எல்லா வழிகளையும் விசா ரித்துத் தெரிந்துகொண்டேன். பிரதி மாதமும் நூற்றுக்கணக்கானவர்கள் எல்லையைத் தாண்டி" குறுக்கு வழியாக செல்கிருர்கள்!” என்ருன் ஜேம்ஸ். "நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். 4 - - з з

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/53&oldid=1274830" இலிருந்து மீள்விக்கப்பட்டது