உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


"அவர்கள் எல்லோரும் அப்படிச் செய்திருக் கிருர்களே! நான் மாத்திரம் ஏன் அப்படிச் செய்யக் கூடாது? நாம் மாத்திரம் ஏன் அப்படிச் செய்ய லாகாது? இந்தக் கோடையின்போது, ஆயிரக் கணக்கான அகதிகள் மலைகள் வழியாகவும் மாகோ வழியாகவும் தப்பியோடினர். சென்ற பத்து ஆண்டு களிலே பத்து லட்சம் அகதிகள் எல்லையைக் கடந்து வெளியேறியுள்ளனர் என்பதை நீங்கள் உணர் வீர்கள் அல்லவா?’ என்று கேட்டான் ஜேம்ஸ். "அது அபாயகரமான செயல் அல்லவா?" என்று விசாரித்தாள் விஸ்டர் ஆங்கெலிகா. “நிச்சயமாக அபாயம் செறிந்ததுதான். பய மில்லாமல் துணிவுடன் இருக்கும்பொழுது ஜனங்கள் எதையும் செய்வார்கள். தாயொருத்தி தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் நீந்தக் கற்றுக் கொடுத் தாள். மூத்தவனுக்குப் பதினெட்டு ஆனதும், அவர் களைத் தப்பி ஓடிவிடும்படி சொன்னுள். மூவரை ரோந்துப் படகுக்காரர்கள் சுட்டுவிட்டனர். ஆனல் கடைக் குட்டியான ஒன்பதே ஒன்பது வயசுப் பையன் மட்டும் நீந்தித் தப்பிவிட்டான்!....அவனைப் பார்க்கையில் எனக்கு வெட்கமாயிருக்கிறது!” "அந்தத் தாயின் கதி?” "அவள் பின்னல் தங்கிவிட்டாள். அம்மாதிரி யான கதைகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து பின்வாங்கிய ஆரம்ப காலத்தில், பெருவாரியான பேர்கள் வந்து தங்கி விட்டனர். இன்றும்கூட, சட்டவிரோதமாகக் குடி புகுந்தோர்கள் நாற்பதிலிருந்து அறுபதுவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/54&oldid=1274831" இலிருந்து மீள்விக்கப்பட்டது