உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


தினமும் வந்து சேர்ந்து ஹாங்காங்கிலும் செளலூனி லும் ஐக்கியப்பட்டு விடுகிருர்கள்!" "அவர்கள் ஏன் தடுத்து நிறுத்தப்படவில்லை?” "மிர்ஸ்.குடாக் கடலுக்கும் டீப்குடாக் கடலுக் கும் நடுவில், கிழக்கே மலைப்பாங்காகவும் மேற்கில் சமமட்டமான நெற்பயிர்களோடும் அமைந்துள்ள பதினேழு மைல் எல்லைக்கோடு ஒன்று உள்ளது. இரு புறத்திலும் சீனவுக்குரிய பகுதியிலும் பிரிட்டனுக் குரிய பகுதியிலும் ஒரு குறுகலான நீரோடைக்குக் குறுக்கே கூர்மையான கம்பி செல்கிறது. எல்லையின் ஒவ்வொரு கஜ தூரத்தையும் ரோந்தின் மூலம் பாது காப்பதென்பது துர்லபம். சிலர் அகப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகிரு.ர்கள்; பழையபடியும் முயற்சி செய் கிருர்கள். ஆனல், வேறு சிலர் எப்போதும் தப்பிவிடு கிரு.ர்கள். மாகோ பகுதியின்ஆற்றில் ஏராளமான பேர்கள் விழுந்து அழிந்து விடுகிருர்கள்!" ஆங்கெலிகா இப்போது சலனம் அடைந்தாள். 'இது மிகவும் பயங்கரமானதாக இருக்கிறதே!.... இதைத்தவிர, வேறு வழி ஏதாகிலும் இருக்கிற தல்லவா?’ என்று வினவினுள். 'அத்தை, நீங்களோ எங்களுடன் வரப்போவது கிடையாது. உங்களுக்கு அனுமதிச் சீட்டு இருக் கிறது; நீங்கள் ரயில் மூலம் போகலாம்” என்று விவரம் சொன்னன் ஜேம்ஸ், . 'உன் விஷயம்?....” "அது எனக்கே தெரியாது. பார்க்கலாம். மற்றவர்கள் தப்பி வெளியேறிவிட்டால், நானும் ஈஸ்-வுடன் தப்பிவிடுவேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/55&oldid=1274832" இலிருந்து மீள்விக்கப்பட்டது