பக்கம்:இலட்சிய பூமி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502


திருப்பத்தைச் சுற்றி வரும்போது சுமார் ஆயிரம் கஜம் தூரத்திலிருந்த ஒரு காவல் நிலையத்திலிருந்து இருளைக் கிழித்துக்கொண்டு ஓர் ஒளி அவர்கள் பக்கம் வீசியது. அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மேலே நோக்கினர். நிலையத்துக்குப் போகும் சாலை யின் பக்சமாக இருந்த சிறு வாய்க்காலை நோக்கிப் பாதித் தூரம்வரை வந்திருந்தார்கள். முன்னல் சென்ற இரு பிரிவினரும் ஏற்கனவே அங்கு நின்றிருந் தனர். அங்கே எழுந்த முணுமுணுப்புக்கு உஸ் என்ற சத்தம் பதிலளித்து அடக்கியது. அவர்கள் அங்கே சிறிது நேரத்தை கழிக்கவேண்டியதாயிற்று. இருள் கவிந்த வானக் கிண்ணத்தில் விண்மீன்கள் ஒளிரத் தொடங்கின. சுமார் பத்து நிமிஷங்கள் கழித்து மீண்டும் ஸர்ச் விளக்கு தெரிந்தது; அவ்விளக்கு முதலில் முன்னும்பின்னுமாக பலதடவை மாறிமாறி வீசியது பின்னர் அவ்வொளி கீழ்த்திசையிலுள்ள நதியை நோக்கிப் பாய்ந்தது. அவ்வொளியினல் பிணைக்கப் பட்டு அவர்கள் கண்கள் யாவும் அவ்வொளியைத் தொடர்ந்து அதிலேயே லயித்திருந்தன, வெகு விரைவில் ஆவ்வெளிச்சம் சாலையை நோக்கி நகர்ந்தது. அவ்வொளியில் ராணுவ உடை அணிந்த உருவங்கள் சில அவர்கள் இருந்த திக்கை நோக்கி வந்துகொண்டிருப்து தெரிந்தது. சாலை வளைவாக இருந்த இடத்தின் ஆந்த ரோந்துப் படை யினர் இருளில் மறைந்தத ஆணுக்குப் புலப்பட வில்லை; அவர்கள் நீர்க்க க்தி வந்துகொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/502&oldid=1275133" இலிருந்து மீள்விக்கப்பட்டது