பக்கம்:இலட்சிய பூமி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


"உன் வருகையை நான் சரியாகவே மதிப்பிடு கிறேன். ஆனல், நீ என்னை கெளலுரன் எல்லையில் சந்திப்பதாக இருந்திருந்தால், நான் இன்னும் அமைதி பெற்றிருப்பேன்.” என்ருள் ஆங்கெலிகா. "அது முடியாது. இந்தப் பயணத்தில் உங்க ளுக்கு நான் உபயோகமாக இருக்கவேண்டுமென்பது தான், நான் மனப்பூர்வமாக நினைத்தேன்.” 'உண்மைதான். அதுதான் உன் சுபாவம்: ஆனலும் ஈஸ்தரை நீ பார்க்கவும் ஆசைப்பட்டாய். அதுவும் எனக்குத் தெரியும். நான் இப்போது எவ் வளவு மூப்படைந்ததாகத் தோன்றுகிாறன்?டுசால்!' 'அத்தை, நீங்கள் என் வாயைக் கிளறவேண்டிய தில்லை. துளிக்கூட நீங்கள் மூப்படைந்ததாகத் தோன்றவில்லை. கொஞ்சம் மெலிந்திருக்கிறீர்கள்; அவ்வளவுதான். ஆனல் சிறந்த தெய்வீகப் பொலி வுடன் விளங்குகிறீர்கள். நேற்று உங்களைப் பார்த்த போதே நான்.இதைக் கண்டுகொண்டேன்." 'அவ்வளவு நன்ருக இருப்பதாக என்னல் உணர முடியவில்லை. நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். என் நோயை நானே கண்டுபிடித்திருக்கிறேன். அது நாள்பட்ட கூடியரோகம்-டி. பி!...” என்று தெரிவித் தாள் அவனுடைய அத்தை. ஜேம்ஸின் கண்கள் அவளைக் கூர்ந்து நோக்கின. "நோயின் அடையாளங்கள் இம்மட்டில் தெரிந்த வரை நன்மைதான். தகுந்த சிகிச்சையும் போதிய ஒய்வும் கிடைத்தால் நீங்கள் நல்லபடியாகத் தேறி விடுவீர்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/57&oldid=1274833" இலிருந்து மீள்விக்கப்பட்டது