உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 "அதற்கு அவர்கள் என்னை அனுமதித்தால், நான் முன்னேறிவிடுவேன். ஒவ்வொரு தினமும் என்னலான நன்மையையே செய்கிறேன். இங்கு தங்கினல் நான் ஆனந்தமடைவேன்' சற்று நேரம் அவள் நிறுத்தினுள்; நன்ருக மூச்சுவிட்டாள். 'அவர்கள் உங்களிடம் சுமுகமாக நடந்துகொள் கிருர்களல்லவா?” 'ஒற்றர் கண்காணிப்புப் போன்ற கெடுபிடி எதுவுமில்லை. அவர்கள் என்னை நன்கு அறிந்து கொண்டார்கள்; உள்ளூர் மக்கள் எல்லோருக்கும் என்னைத் தெரியும். என்னைப்போல மெலிந்த பல வீனமான ஒரு பெண்ணினல் அவர்களுடைய ஆட்சி யைப் பயமுறுத்துவதென்பது அசாத்தியம்! நான் இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டுமென்று சென்ற மாதம் என்னிடம் அறிவித்தார்கள், தனிப்பட்ட முறையில் அது எனக்கு ஒன்றும் விரோதமானதல்ல என்பதை நான் அறிவேன்” என்ருள் ஆங்கேலிகா. தலையைச் சாய்த்தபடி, நிதானமாக-ஆளுல் ஒரளவு துயரத்துடன் ஸிஸ்டர் ஆங்கெலிகா பேச லாளுள்: 'என்னுடைய பணி வீணுகிவிட்டதாக நான் கருதவில்லை. கடந்த இருபத்திரண்டு வருஷங்களாக இதையே என்னுடைய வீடாக ஆக்கிக்கொண்டிருந் தேன். என் சீன நண்பர்கள் எல்லோரிடமிருந்தும் பிரிந்து செல்வதென்பது மிகவும் கஷ்டமான செய லாகும்; அப்பிரிவை என்னும் தாள முடியாது. உதா ரணத்திற்கு ஈஸ்தரை-ஈஸ்-வை எடுத்துக்கொள். குழந்தையிலிருந்தே அவளை எனக்குத் தெரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/58&oldid=753135" இலிருந்து மீள்விக்கப்பட்டது