உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை கிதை, கதையின் அமைப்பு, கதா பாத்திரங்கள் எல்லாம் கற்பனையானவை; ஆனல், பின்னணிப் பொருள் யாவும் உண்மையானவை. சீனுவிலிருந்து தப்பி வந்து ஹாங்காங்கில் இப்பொழுது வசித்துக் கொண்டிருக்கும் கல்விமான்கள் பலருக்கு என்னுடைய நன்றி உரியது; அவர்கள் இக்கதையில் பெயரின்றி இருப்பார்கள். அவர்களோடு நடந்த எண்ணற்ற உரையாடல்களிலிருந்து, சீனுவினின்றும் தப்பிச் செல் வதற்கான நிலைகள், மார்க்கங்கள் பற்றியும், சாலை களில் யதேச்சையாகக் கிடைத்த சுவைமிக்க தகவல்கள் அவர்களது திறமை, யுக்திகள், அபாயங்கள் குறித்தும் நான் நேரிடையாகத் தகவல்களைப் பெற்றேன். இந்தப் பேட்டிகளிலிருந்து நான் பெற்ற எதிர்பாராத அநுபவங்களில் ஒன்று, சாலையிலிருந்த அகதிகளின் களியாட்டம் ஆகும். அவர்கள் யாத்திரிகளைப்போல் ஆனந்தமும் கனவும், குதுரகலமும், வேடிக்கையும் நிறைந்தவர்களாக இருந்தார்கள். ராபின் குன்றிலிருந்து எல்லைக்கு அப்பால் தெரிந்த தோற்றம், ஷாடெளகாக்-லாக்மாசெள ஆகிய இரு பகுதிகளின் எல்லை ஆகியவற்றுக்கு நான் நேரிடையாகச் செய்த விஜயங்களின் மூலம் பல தகவல்களை சேகரித்துக்கொண்டேன். பாத்திரங்களின் பெயர்களையும், இடங்களின் பெயர்களையும் கான்டன் மொழியிலேயே அமைத்துக் கொண்டுள்ளேன். லின் யூடாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/7&oldid=753148" இலிருந்து மீள்விக்கப்பட்டது