உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 1 கிழக்கு நதி, வெய்ச்சோ நகரத்தைத் தாண்டி காண்டனைச் சார்ந்த பொக்கா டைக்ரிஸ்-பேர்ல் ஆறு டெல்டாப் பகுதிகளை நோக்கி வேகமாகப் பாய்ந் தோடிக்கொண்டிருந்தது. ஆற்றின் நீர் செந்நிற மாகவும், அதன் நீரோட்டம் பயங்கரமாகவும் இருந்தது. - 1959, செப்டம்பர் கடைசி வாரம். மூன்று நாட்களாக வெய்யில் மிகவும் அதிகம். புழுக்கமும் ஈரப்பதமான உஷ்ணமும் எங்கும் கலந் திருந்தன. சமீபத்தில் அந்நகரம் இரண்டு பெருஞ் சோதனை களுக்கு உள்ளாகி இருந்தது. ஜூன் மாதத்தில் வெள் ளம் வந்தது; அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத் தில் அறுவடை குறைந்தது! வெய்ச்சோவிலிருந்து மேற்கே அறுபது மைல் தூரத்தில் இருக்கும் கான்டன ஓர் இருப்புப்பாதை இணைத்தது. தெற்கே ஐம்பது மைல் தொலைவில் ஹாங்-காங் இருக்கிறது. காம்ஃபர்ஹெட் ஜங்ஷனில் இருந்த காண்டன் கேளலுன் ரெயில் பாதையுடன் ஒரு சிறிய பாதை சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/8&oldid=753159" இலிருந்து மீள்விக்கப்பட்டது