உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


சிப் பிரிவுகளை-நகர்ப்புறங்களிலும் விஸ்தரிக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. ஆண்டு முடிவுக்குள் இத் திட்டம் பூர்த்தியாகிவிடும். 'பெரிய பாய்ச்சல் முன்னேற்றம்” ஒராண்டுக்கு முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது. இந் த த் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடிய சக்தி கட்சிக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஒழுங்காக நிர்வாகம் செய்யப் பெற்ற மிருகக் காட்சிசாலையைப் போன்று வெய்ச்சோ நகரம் அமைதியாக இருந்தது. எறும்புக் கூட்டத்திடையே உள்ளதுபோல எல்லா நடவடிக்கைகளும் ஒழுங்கு முறையாக நடந்தன. உழைக்கும் தேனிக்கள் மாதிரி எல்லா மக்களும் மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்தார்கள். அரசாங்கம் இட்டதுதான் சட்டம்! முன்னைப்போன்ற ஆரவாரம் இப்போது கிடை யாது. சந்தையில் பாத்திரம் பண்டம் விழுந்தால் கூட காது கேட்கும்; அவ்வளவு அமைதி இப்போது நகரத்தில் நிலவியிருந்தது. ஆண்கள் தேவைக்கு அதிகமாகப் பேசவில்லை. சோம்பேறித்தனமாக வம்பளக்க பெண்கள் நிற்பதில்லை. ஏனென்ருல், நண்பர்களையும் அண்டை அயலவர்களையும் யாரும் நம்ப முடிவதில்லை! நாட்டின் ஒவ்வொரு நடப்பையும் கட்சி எங் கிருந்தோ, எப்படியோ மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே யிருந்தது. நாட்டிலே அமைதி கண்காணிக்கப்பட்டது. கூச்சல் போட்டால் எல்லோரும் ஒரே குரலில் கூச்சல் போடவேண்டும். இல்லாவிட்டால், எல்லோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/9&oldid=1274800" இலிருந்து மீள்விக்கப்பட்டது