உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


'அச்சமா?....என் உள்ளம் துடிக்கிறது. இந்தக் கோடையில் ஏராளமான மக்கள் தப்பிச் சென்ருர் கள். நானும் அம்மாதிரி முயற்சி செய்ய எண்ண மிட்டேன். ஆனல், என் தந்தை என்னை அனுமதிக்க வில்லை.” 'எனக்குச் சொல்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. ஹாங்காங்கில் நம் இருவருக்கும் திருமணம் நடக்கும். அங்கே உனக்கென்று தயாராக ஒரு வீடு வைத்திருக்கிறேன்....அடடே, நீ ஏன் அழு கிருய்?' என்று கேட்டான் ஜேம்ஸ். அவள் கைக்குட்டையை எடுத்து, மூக்கைச் சிந்தினுள். 'என்னுல் அதை நம்பவே முடியவில்லை; அந்த அளவுக்கு நான் ரொம்பவும் ஆனந்தமாக இருக்கிறேன். நீங்கள் சொல்வது நிஜம்தான?” "ஆம்; நிச்சயமாக-முற்றிலும் உண்மை!” ஜேம்ஸ் அவளது முகத்தைப் பார்த்தான்; அவள் முன்னுேக்கிச் சரியப்போளுள்; அவளைச் சட்டென்று இறுக்கி இழுத்துக் கட்டிகொண்டான். நீண்ட நேரமாக அவளைத் தாங்கிக்கொண்டிருந்த பாரத்தி னின்றும் அவளுடைய உடலும் உள்ளமும் திடீ ரென்று விடுதலை பெற்றுவிட்டதைப் போன்று தோன்றியது. அது மகிழ்ச்சிதான்!. 'ஜேம்ஸ், என்னை நீங்கள் அழைத்துப்போக வரும் விஷயத்தை ஏன் என்னிடம் முன்னமேயே சொல்லவில்லை?" "கடிதங்களில் அந்த விவரத்தையெல்லாம் காட்டிமுேடியுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/92&oldid=1274854" இலிருந்து மீள்விக்கப்பட்டது