பக்கம்:இலட்சிய பூமி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


தன்னுடைய கரங்களை அவனது தோள்களில் பதித்தாள்; அவளுடைய கை விரல்கள் அவனது தலை மயிரை அலைத்தன; பிறகு அவள் கைகள் கீழே தாழ்ந்தன; அவனது தோள்களையும் புஜங்களையும் கொஞ்சுதலுடன் சீராட்டினுள்; தன்னுடைய சகல உணர்ச்சிகளையும் ஒன்று திரட்டி அவனது ஸ்பரி சத்தை-அவன் தன்னை அணைத்திருப்பதை-அனுப விக்க அவள் இப்படிச் செய்தாள். “தாங்கள் மெய்யாகவே ஜேம்ஸ் தாயெர் தானே? கனவல்லவே? சொல்லுங்கள்!...” 'நான் ஜேம்ஸ்தாயரேதான்!-உன்னுடைய வனேதான்!” பிறகு, அவனுடைய உதடுகளில் அவள் ஒரு முத்தத்தைப் பதியவைத்தாள். ஆழ்ந்த ஆர்வம் மிக்க சுவையான முத்தம் அது. அந்த முத்தத்தின் பயனுக, அவள் தனது இதயத்தின் தாகத்தைத் தணித்துக்கொண்டாற் போலவும், தன் ஆன்மாவும் உடலும் மீண்டும் புத்துயிர் பெற ஊட்டத்தைச் சேகரம் செய்து கொண்டாற் போலவும் தோன் றியது. மனவுறுதி, மனேசக்தி, உடல் ஆகியவை முழுமையாகச் சரணடைந்த வகையில், அவனுடைய புஜங்களிலே துவண்டு சரிந்து கிட்ந்த அவளது மேனியை ஆரத் தழுவினன் ஜேம்ஸ். அவன் இதயம் அடித்துக்கொண்டது. அவன் இப்போது கண்மூடித்தனமான நிலையில், இருந் தான்; அறிவிழந்த நிலையில் அல்ல. இன்னும் சில நாட்களிலே அவனுடைய மணமகளாக ஆகப்பேர்கிற ஒருத்தியை-இந்த விலை மதிக்கமுடியாத சுமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/93&oldid=1274855" இலிருந்து மீள்விக்கப்பட்டது