பக்கம்:இலட்சிய பூமி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


அவன் தன்னுடைய புஜங்களில் ஏந்தியிருந்தான் தலையைக் குனிந்து அவளை ஆதரவுடனும் நேசத் துட னும் முத்தமிட்டான். தங்களுடைய உடல்-ஆன் மாவின் முதல் ஐக்கியத்தை அருவருப்பான அந்தச் சூழலிலே களங்கப்படுத்த அவன் விரும்பவில்லை. ஆனலும் தங்கள் இருவருடைய மனித உணர்வு கள் உருகி உருக்குலைந்து இரண்டும் ஒன்ருகிவிட்ட தைப் போன்ற விசித்திர உணர்வு அவனுள் கிளர்ந் தெழுந்தது. அவள் சீனப்பெண் என்பது பிரச்சினை அல்ல. இடம், காலம் ஆகியவற்றின் தடைகளெல் லாம் உதறி ஒதுக்கப்பட்டுவிட்டன. அவள் வய தடைந்த ஒரு பெண்; அவனுக்கு அவள்தான் எல்லாம்! அதேபோல அவன்தான் அவளுக்குச் சகல மும், பீகிங்கில் மணம் கோரி காதலில் திளைத்திருந்த நாட்களில்கூட, சீனத்துப் பெண்மையின் பாரம்பரிய பண்பில் அவன் கருத்து மிக்கவனகவே இருந்தான், அவன் கறைப்படுத்தக்கூடாத ஒரு பரம்பரையின் சின்னமாக அவள் இருந்தாள். தன்னுடைய சுயக் கட்டுப்பாட்டைக் கண்டு அவன் ஆச்சரியமடைந் தான். அதை நியாயமென்று காட்டினுள் ஈஸ் 9. ஒரு பெண் தன் நெஞ்சத்தை ஒருவனுக்குக் கொடுத்து விட்டால், அப்பால் வாழ்நாள் பூராவும் அவள் அவ னுக்கே சொந்தம் என்கிற பண்டைய கீழ்த்திசை நாடுகளின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவள் அவள். விவாகப் பேச்சுக்கள் பல நடந்தன; ஆனல் அவள் ஆர்வம் இழந்திருந்தாள். ஆரம்ப காலத்தில் கம் யூனிஸ்ட் ஆட்சியின் கீழ், சகஜமான திருமணம் நடக் காமல், உடலுறவு கொள்ளும் விசித்திர வழக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/94&oldid=1274856" இலிருந்து மீள்விக்கப்பட்டது