உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


பெருவாரியாக அனுஷ்டிக்கப்பட்டது; அதற்குச் சட்டமும் அனுமதித்தது. திருமணம் என்பது எளி தாகவும், விவாக ரத்து என்பது அதைப்பார்க்கிலும் எளிதாகவும் இருந்தது! 'நாங்கள் இருவர்!” என்று ஆரம்பித்து, இரண்டு மூன்று வரிகளுடன் கூடிய ஒரு செய்தித்தாள் விளம்பரம் அன்றைய போக்குக்குப் போதுமானதாக இருந்தது. இளைஞர்களும் பெண் களும், தாங்கள் நவநாகரிகமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆகிவிட்டதாக நம்பினர்கள். ஆனல் ஈஸா துல்லியமான சீனத்துப் பாரம்பரியப் பண் பாட்டைக் கடைப்பிடித்தாள், அவள் "கட்சி"யின் உறுப்பினள் அல்லள்; நவநாகரிகமாக இருப்பதற்கு' அவள் சம்மதிக்கவில்லை. அவள் தாராளமாக, மனம் உவந்து பழகினுள் ஆனல் காதலில் அவ்வாறின்றி அளவோடுஇருந்ததை ஜேம்ஸ் பெரிதும் உணர்ந்து அவள் சுபாவத்தை அறிந்தான். ஆனல் கம்யூனிஸ்ட் வாலிபனே காதலில் தாராளமாகவும் மைேபலத்தில் அவ்வாறு இல்லா மலும் காணப்பட்டான். எட்டாண்டுகளின் சித்திர வதை இப்பொழுது முடியப்போகிறது. அவள் அவனுக்கே உரியவளாக ஆகிவிடப் போகிருள். "நான் இப்போது புறப்படவேண்டும். இரவு திரும்பிவிடுகிறேன்” என்ருள் அவள். 'சற்றுப் பொறு. நாம் பேசவேண்டியது நிரம்ப இருக்கிறது.” . "ஆகையால்தான், நான் இரவு வரப்போகிறேன். சில நிமிஷங்களில் பேசி முடிப்பதற்கு அது சாதாரண மான சங்கதியல்லவே!" s”. . . .'; ' ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/95&oldid=1274857" இலிருந்து மீள்விக்கப்பட்டது