உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


"இரவு எப்போது வருவாய்!" சுமார் எட்டு மணிக்கு. சரிதானே? சுவரின் இந்தப் பக்கத்தில் அந்தரங்கமான கொடிப் பந்தல் வீடு ஒன்று இருக்கிறதே, அது உங்களுக்குத் தெரியுமல்லவா? நான் அங்கே இருப்பேன். "அது நமக்குப் பாதுகாப்பாக இருக்குமா? நீ அதற்குத் துணிவாயா?” "நிச்சயம் துணிவேன், நம் இருவருக்காக ஆஸ் பத்திரி வழியாக நான் வந்துவிடுவேன். நான் என் தகப்பனருடன் பேசியாக வேண்டும். நகரத்தில் பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன!” என்ருள் ஈஸ்". தயக்கத்துடன் அவளைப் போக அனுமதித்தான் ஜேம்ஸ். கதவுக்கப்பால் அவள் மறைந்ததைக் கவ னித்தான். பிறகு, மதப்பிரசார சபை இல்லத்துக் துக்குக் குறுக்குவழியாகத் திரும்பினன். அந்தக் கொடிப் பந்தல் வீடு-கோடைகால வீடு, சில வாழை மரங்களுக்குப் பின்புறத்தில் ஆஸ் பத்திரிச் சுற்று மதிலின் அருகே செடிகள் அடர்ந்த ஒரு மூலையில் இருந்தது. அவள் மனச் சோர்வடைந் திருந்தபோதோ, அல்லது மனச் சலனம் அடைந்த சமயத்திலோ அவ்விடத்தைத்தான் தேடிச் செல்வது வழக்கம். ஆனல் வழக்கமாக யாரும் அங்கு வருவ தில்லை. ஆசனங்களுக்குரிய பலகைகள் உடைந்து கிலமாகி இருந்ததால் அவை வசதிக் குறைவாக அமைந்திருந்தன. ஈஸு தரையில் கிடந்த ஒரு கந்தல் மெத்தையில் முழங்கால்களைக் கட்டிய வண்ணம் அமர்ந்திருந்ததைக் கண்டான் ஜேம்ஸ். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/96&oldid=1274858" இலிருந்து மீள்விக்கப்பட்டது