பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

உலகப் பெரியார் காந்தி



அந்த மகாராஜாக்கள், தேவகட்டளையால் பூர்வபுண்ணிய வசத்தால், சிங்காதனம் ஏறும் பாக்கியம் பெற்றார்கள் என்று மக்கள் எண்ணினர்.

மத குருமார்களின் தங்கப் பல்லக்குக்கு காணிக்கை செலுத்தினர். திரு அருளால் அவர்கள் திவ்விய புருஷர்களானார்கள். ஆகவே அத்தகையவர்களின் 'தெரிசனமே' பாபத்தைப் போக்கும் என்று மக்கள் எண்ணினர் அந்த மத குருமார்கள் மனம் வைத்தால், எதுவும் நடைபெறும் என்று மனமார நம்பினர்.

மாயவித்தை தெரிந்தவர்களால், துஷ்ட தேவதைகளைக் கட்டுப்படுத்த முடியும், அவர்கள் கூப்பிட்ட உடனே குட்டிச்சாத்தான் ஓடிவருவான்; நெருப்பு தண்ணீராகும், நீர் நெருப்பாகும். ஆளை மிருகமாக்குவான், மிருகத்தை ஆளாக்குவான் என்றெல்லாம் நம்பிளர் அவர்களிடம் பயப்பட்டனர் -- அவர்களின் மிரட்டலைக் கண்டு அடிபணியவும் சம்மதித்தனர்.

யோகிகளால் புவனத்தை அடக்கமுடியும், தேவ இரகசியத்தை அறிய முடியும், அவர்களிடம் அபாரமான ஆற்றல் உண்டு. அவர்கள் நினைத்தால் அதுபோலவே நடைபெறும் என்று எண்ணினர் யோகிகளையும் பொதுவாகவே சாது சன்யாசிகளையும், மக்களை ஈடேற்றும் மகத்தான சக்தி வாய்ந்தவர்கள் என்றே கருதித் தொழலாயினர்; அவர்களின் அருளைப்பெற ஆவல் கொண்டனர்.

அப்படிப்பட்டவர்களெல்லாம், ஆங்கில ஆட்சி இங்கே ஏற்பட்டதைத் தடுக்கவில்லை -- ஏற்பட்டபிறகு தத்தமது ஆற்றலை உபயோகித்து. அதை எதிர்த்து ஒழிக்கவில்லை ஏன் அதைச் செய்யவில்லை என்று மக்கள் கேட்டதுமில்லை.

அவர்கள் இருந்தனர் -- மக்கள் வணங்கி வந்தனர். ஆங்கிலேயனும் வந்தான்; மக்கள் அவர்களிடம் அஞ்சிக்-