பக்கம்:கள்வர் தலைவன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கள்வர் தலைவன்

[அங்கம்-1

கோஸ்கி, மக்கன்தேவ், வயத்தான், அந்தர்டப்பு, இரிச்சன், நாயனார், காயி, தோப்பாசர்மி, முதலிய கள்வர், குடத்தில் ஐலம் வேப்பிலை முதலியவைகளை எடுத்துக்கொண்டு ஒரு புறமாக வருகின்றனர்.

வ.அடடே! எங்கேயோ பூட்டாண்டா! ஓடி பூட்டாண்டா தப்பிச்சிகினு. [மற்றெல்லோரும்] ஆமாண்டா ! ஆமாண்டா! நா.இல்லை இல்லை அதோ இருக்கிறான் பார்! இ. அடே ! நம்பசாமி பக்கத்திலே உக்காந்துகினு இருக்கிறார்டா ! நா.ஒரு வேளை அவர் தான் அவிழ்த்துவிட்டாரா என்ன ? கோ.அடே இரிச்சா! போயி கேக்கலாமா சாமியே? வ.ஆமாண்டா! இண்ணைக்கி எப்படியும் நரபலிகொடுக்கணும் இல்லா போனா இந்த வருஷமெல்லாம் வவுத்துலே மண்ணுதான் ! கோ.ஆமாம் ஆமாம், நீ போயி சாமியே கேளு. நா.ஆமாம். அடே வயத்தான்! நீ தான் சரியானவன், போய் கேள், நாங்கள் பின்னால் வருகிறோம். வ.ஒரு வேளை கோவிச்சிகினா சாமி, என்னாடா செய்யரது? இ.ஒண்ணும் கோவிச்சிக்க மாட்டாரு, நீ போயி கேளு. வ.நாம் மாட்டேண்டா எனக்கு பயமா இருக்குது ! இ.அடே ! கேட்டா எம்பங்கு தேங்கா தர்ரேன் ! வ.தேங்காயா தேங்காயா ஒரு முடி தரணும். இ.தர்ரோம் போ. தேங்கா இண்ணா ஆ இண்ணு வாயெதெறக்குறாம் பார் ! வ.என்னா இண்ணுடா கேக்கரது? நா.சத்!-நாழி ஆய்விட்டது பலிகொடுக்கவேண்டுமென்று கேள். அடே, இல்லாவிட்டால் இவனையே பிடித்து பலி கொடுத்து விடலாமாடா ! கோ.ஆ! சரியான வேலை, வாஇப்படி, போயி கேக்கிரையா என்னா? வ.இல்லை இல்லை, இதோ போயிகேக்கரேன். [அவர்களிருக்குமிடம் போகிறார்கள், வயத்தான் முதலிலும் மற்றவர்கள் பின்னுமாக.] வ.சாமி.-- ஜெ.என்னடா அது? வ. உம்-[பின்னால் இருப்பவர்களுக்குச் சைகை செய்கிறான்] உம்-என்னாடா சொல்றது என்னாடா சொல்ரது? [திரும்பி மற்றவர்களைக் கேட்கிறான்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/8&oldid=1555726" இலிருந்து மீள்விக்கப்பட்டது