பக்கம்:கள்வர் தலைவன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி-1]

கள்வர் தலைவன்

5

இ.தேங்கா! -பத்திரம்.
ஜெ. என்னடா அது?
வ. உம்-தேங்கா--
ஜெ.தேங்காயாவேண்டும்?அடே! இப்படி வாருங்கள் எல்லோரும். இவரையல்லவா இன்றைக்கு நரபலிகொடுக்க இங்கே கட்டிவைத்தீர்கள்? இவர் யார் தெரியுமா உங்களுக்கு?
எல்.தெரியாது !
ஜெ.இவர் என்னுடைய பிராண சிநேகிதர். இவரையா கொல்லப் பார்த்தீர்கள் நீங்கள் ?
எல்.இல்லை சாமி இல்லை!
ஜெ.நான் சொல்வதைக் கேளுங்கள். இனிமேல் நீங்கள் எப்பொழுதும் நரபலி கொடுக்கலாகாது. நான் ஆக்ஞாபிக்கின்றேன்; நமக்கொரு துன்பமும் செய்யாத எம்மனிதனையும் நாம் வருத்தலாகாது என்று நான் கட்டயிட்டிருக்கின்றதை மறந்தீர்களோ ?
கோ.ஆமாஞ்சாமி, பொலிபோடா போனால் கருப்பண்ணசாமி கோவிச்சிகினா? அப்புறம் இந்த வருஷமெல்லாம் நமக் கொண்ணும் ஆப்பிடாதே.
ஜெ.அப்படி யல்ல, ஒரு ஆட்டைப்பிடித்துக்கொண்டு போய் பலியிட்டு பூஜை நிறைவேற்றுங்கள்.
வ.ஆமாஞ்சாமி! ஆமாஞ்சாமி! நல்லவேலை !
இ.ஆடு ஒதவுமடா ?
வ.வாயெ மூடுடா உனக்கென்ன தெரியும்! மனுஷனைக் கொண்ணா என்ன பிரயோஜனம்! ஆட்டைக்கொண்ணாலும் திண்ணலாம்.
நா.எப்பொழுது பார்த்தாலும் திண்டியே இவனுக்கு.
வ.ஆனா சாமி! மனுஷன் எவ்வளவுபெரியவனா இருக்கிறான்? ஆடு இவ்வளவுண்டா இருக்குதே. ஒரு ஆடு போதுமா? நாலு ஆடு பொலிபோட்டா அதுக்கும் இதுக்கும் சரியாயிருக்கும்.
ஜெ.அப்படியே. சரிதான் புறப்படுங்கள் பூசைபோட,
வ.பலே! அடேகோஸ்கி! இரிச்சா! மக்கன்தேவு! காயி! அல்லாம் வாங்கடா. இண்ணைக்கு நரிமூஞ்சிலே முழிச் சோண்டா நாலாடுடா !
நா.நாலாடு என்னத்துக்கடா ?
வ.இத்தனி பேரிருக்கிறோமே ஒரு ஆடுபோதுமா ? நானே ஒரு ஆடுதிண்ணுவனே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/9&oldid=1555765" இலிருந்து மீள்விக்கப்பட்டது