பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் பாராட்டிய அரசர்கள் 33

பின்னர்ப் பகைவர் நாடுகளுள் தான்் புகுந்து போரிடலா யினன். ஒருமுறை கொங்குநாடு நோக்கிச் சென்று, வழி யிற் கிடந்த நாடு பலவற்றையும் கைக்கொண்டு இறுதியில் கொங்கரையும் ஒட்டி வெற்றி பெற்ருன் ; இவ் வெற்றி குறித்து அவன் கூடல்கரில் விழாவும் கொண்டாடினர்; கொங்கரொடு கடத்திய இப்போரில், பாண்டியர் படைத் தலைவனுகிய அதிகன் என்பான் இறந்தான்்; பகைவர் படைத்தலைவன் பட்டான் என்று கேட்டுக் கொங்கர்கள் ஆரவாரமும் செய்தனர். மற்றொருமுறை செழியன் சேர ணுடு சென்று, செல்வத்தால் சிறந்த அவன் முசிறித் துறை யை முற்றிச் சோன் யானைப்படைகளை அழித்து வென்று மீண்டான். இவ்வாறு சேய பல நாடுகளேயும் வென்று கொண்ட செழியன், தன் நாட்டின் அணித்தே, டுேர் என் லும் ஊரில் அரசிருக்க எவ்வி என்பானே வென்று அவனுக் குரிய மிழலைக்கூற்றத்தையும், வேளிர்க்குரிய முத்துர்ற்றுக் சுற்றத்தையும் தன் ஆட்சிக்குட்படுத்திக் கொண்டான்.

தலையாலங்கானத்தில், நெடுஞ்செழியன் நடத்திய போரைப் பாராட்டியவர் பலராயினும், அக்களத்தில், அவைேடு போரிட்ட பகைவர்கள் யாவர் என்பதைப் பெயர்கூறி விளக்கியவர் நக்கீரர் ஒருவரே :

' கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்,

ஆலங் கானத்து அகன்தலை சிவப்ப, சேரல், செம்பியன், சினம்கெழு கிதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, நாாரி கறவின் எருமை யூரன், தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன் என்று எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் முரசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக் கொன்று களம் வேட்ட ஞான்று - வென்றிகொள் வீார் ஆர்ப்பு.’ (அகம். உசு) - நெடுஞ்செழியன் பெற்ற கன்னிப்போர் வெற்றியாகிய தலையாலங்கானத்துச் செருவினேயே யன்றி, அவன்,

r.–3