உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வள்ளல்கள்

வாட்டும் பசினோய் ஒரு சார் துன்புறுத்த, பாண்டேனும் சென்று பொருள் பெற்று மீளின், வழியில் அப் பொருள் யும் பறித்துக் கொள்ளும் ஆறலைகள்வர் அளிக்கும் கொடுமை பெருந்துயர்தர வருந்தும் புலவர்கள் தம வறுமைவாழ்வின் துயரெலாம் அறிந்து போக்கி அருள் புரிய வல்லான் ஆப் அண்டிரனே எனக் கண்ட துறையூர் இடைகிழார், அவனே அடைந்து, 'ஆய், இங்கனம் வறுமை யால் வருந்தும் எம்போல்வார்க்குக் கொடுப்பே த கொடை ; எமக்கு வழங்குவோரே, உண்மை வள்ளல்களாவர்; எம்போல்வாால்லார்க்குக் கொடுத்தல் கொடையாகாது ; அது, யாதோ ஒரு பயன் கருதிக் கொடுப்பதாகுமாகை யால், அவ்வாறு அளிப்பார், பிறர்க்குக் கொடுத்தோராகார் : தமக்கே கொடுத்துக்கொண்டவராவர் ; ஆகவே அன்னர் வள்ளல்கள் என வாழ்த்துப் பெருர்; ஆகவே, ஆப் கின் தகுதிக்கு ஏற்கும் வகை எமக்கு வழங்கி வாழ்வளிப்பா யாக!” என அவன்பால் தாம் கொண்ட உரிமை தோன்றப் பொருள் வேண்டியுள்ளார்: -

" ஆஅங்கு, எனப்பகையும் அறியுருன் ஆப்

எனக் கருதிப், பெயரேத்தி வாயார, சின் இசைகம்பிச் சுடர்சுட்ட சுரத்தேறி இவண்வந்த பெருகசையேம் ; எமக்கு ஈவோர். பிறர்க்குஈவோர் ; பிறர்க்குஈவோர் தமக்குஈபளன. அனேத்துரைத்தனன் யாளுக நினக்கொத்தது கோடி நல்கினே விடுமதி பரிசில்." . (புறம் : கங்சு) ஆய், தன்பால் வந்து பொருள் வேண்டி நிற்போர், அப் பொருள் பெறும் தகுதியுடையாாயினும், அல்லாயி லும் அவர்கள் அனேவர்க்கும், மிடாக்களில் ஆக்கிவைக் திருக்கும் சோற்றை, அவர்கள் கையிற் கொணரும் உண் கலன் கிறையத் கொடுப்பன்; அவன் காடு, யானைகள் நிறைந்தது; அக்காடுகளுக்கிடையே, அவனுக்கு உரிமை