பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய் 23.

யாய் இருந்தது தலையாறு என்னும் ஊரி என, அவன்

காடையையும், நாட்டையும் பாராட்டினர் பரணர்.

' வல்லினும், வல்லா ராயினும் சென்ருேர்க்குச்

சாலவிழ் நெடுங்குழி கிறைய வீசும் மாஅல் யானே ஆஅய் கானத்துத் தலையாற்று கிலேஇய சேயுயர் பிறங்கல்.’

(அகம் : கடுஉ).

ஆய் அண்டிானேப் பாடிய புலவர் பலாாயினும், அவன் புகழெலாம் தோன்றப் பாடிய புலவர், உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் ஒருவரே; ஆயைப் பாராட்டும் பெருஞ். சித்திரனர் எனும் புலவர், அவர் மோசியார் பாராட்டிய பெருமையுடையான் என்று பாராட்டியுள்ளமை யுணர்க. " திருந்துமொழி, மோசி பாடிய ஆயும்’ (புறம்: கடுஅ) அதியமான் நெடுமானஞ்சிக்கு ஒளவையார் போலவும், பரிரிவேட்குக் கபிலர் போலவும், ஆய் அண்டிரனுக்கு அவைக்களப் புலவராய் இருந்து பாராட்டியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரே யாவர்.

ஆய், தன்னைப் பாடிவரும் பாணர், பொருநர், புலவர், கூத்தர் முதலாயிைேர்க் கெல்லாம் யானே பல அளித்து மகிழும் இயல்புடையன்; அவன் இவ்வாறு யானேகளையே பரிசாக அளிப்பதைக் கண்ட புலவர் முடமோசியார்க்கு ஒர் ஐயம் உண்டாயிற்று; உடனே அவனே அடைந்து “ஆய்!. நின்னைப் பாடிவருநகர்க்கு நீ பரிசாக அளிக்கும் யானைகளே எண்ணக் காணல் இயலவில்லை; இவ்வாறு வருவார்க் கெல் லாம் யானைகளையே அளிக்கின்றனேயே; அத்தனே யானை களே நீ யாங்குப் பெறுகின்றன; வின் நாட்டுப் பெண் யானைகள், ஒரு முறை கருவுற்றவழிப் பத்துக் கன்று களைப் பெற்றுத் தருகின்றனவோ?’ எனத் தன் ஐயமும், வியப்பும் ஒருங்கே தோன்ற அவனே வினவுவாராயினர்.

" விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் கின்னுட்டு

இளம்பிடி ஒருகுல் பத்து ஈனும்மோ " (புறம் : கட0)