பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வெய்யோள் -விருப்பத்தினையுடைய கண்ணகி. 67. குறி.குறிப்பாலே. குறுகாது - சாராது. 68. == தோம் - குற்றம்.கடிஞை - பிச்சைப் பாத்திரம். சுவல்-தோள். அறுவை-உறி. 69. பீலி-மயில் தோகை 70. மொழிப் பொருள். பொருண் மொழியாகிய. 71. சிறப்பின்-சிறப்பினையுடைய ஒழுக்கத் துடன், படர் - செல்லுதல். 72. முறம் செவி வாரணம்-முறம்போலும் செவியையுடைய யானை, சமம்-போரில். முருக்கிய-கெடுத்த. புறம் சிறை வாரணம் - புறத்தே சிறகினையுடைய கோழி. கோழி என்னு பெயரினையுடைய உறையூர். m வினுக்கள் : 1. கோவலனும் கண்ணகியும் எவ்வெவற்றைக் கடந்து கவுந்திப் பள்ளியை அடைகின்றனர் ? 2. கவுந்தியடிகளின் வினவும் கோவலன் தந்த விடையும் யாவை ? 3. தொடி வளைத் தோளி துயர்தீர்த்தேன்-இடமும் பொழுதுஞ் சுட்டி விளக்குக. _* 4. சோலை வழியில் நேரும் துன்பங்கள் யாவை ? + 5. வயல் வழியிற் செல்லுங்கால் விளையும் ஏதங்கள் யாவை ? 6. கவுந்தியடிகள் வழியின் அருமைகளாகக் கூறியவற்றைத் தொகுத்துப் பதினைந்து வரிகளில் எழுதுக. 2. மணிமேகலை * இஃது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலை என்பவ ளது வரலாற்றைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. இந்நூல் பெளத்த மதக் கொள்கை களைத் தழுவியது. ஆசிரியர்: மதுரைக் கூலவாணிகன் சித்தலைச் சாத்தனர். இவர் மதுரையில் கூல வாணிகம் செய்தவரென்றும் இத்தலை என்னும் ஊரினரென்றுங் கூறுவர். கடைச் சங்கப் புலவருள் ஒருவராக எண்ணப்படுபவர். இளங்கோவடிகள் காலத்தவர். அருஞ்சொற்பொருள் : 1. பழுது-குற்றம். காட்சி - தோற்றம். பீடிகை - பீடம். 2. தேவர் கோன் இந்திரன். 4. தரும தலைவன்-புத்ததேவன். நோன்பினரே பீடிகையைக் காண்டற்குரியர்; கண்டு பழம் பிறப்புணரப் பெறுவர். பைக்தொடி-விளி 8. அறமொழி-தருமபதம். 9. ஒருதலை-உறுதியாக ஆங்கனமாகிய அத்தன்மையை உடையையாகிய, 11. பெயர்-புகழ். 12. மயங்கிய-கலந்துள்ள. 13. இலஞ்சி-பொய்கை. 14. இருது இளவேனில் - இளவேனிற் பருவத்து. இரண்டிரண்டு மாதங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/59&oldid=881233" இலிருந்து மீள்விக்கப்பட்டது