பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


செய்தவன் தம்முயிர்க் குயிராகிய இறைவனே என்னும் உண்மையினை,

பத்திமையால் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை

(6-54-3)

எனவும்,

பன்னிய செந்தமிழ்மாலை பாடுவித்தென்
சிந்தை மயக்கறுத்ததிரு வருளினானை

(6-84-4)

எனவும் வரும் தொடர்களில் புலப்படுத்தியுள்ளமை இங்கு நினைக்கத்தக்கது.

செந்தமிழ்ச் சிவநெறியில் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டமரபினருள் ஒருவராய்த் தன்னை அன்பினால் வழிபட்டு வரும் இராமலிங்கருக்குத் தன் புகழ்த்திறங்களைத் தேனினுமினிய செந்தமிழ்ப் பாடல்களால் பாடுந்திறத்தினை உள் நின்று வழங்கியருளியவன் எல்லாம் வல்ல சிவபெருமானே என்பது,

உருவத்திலே சிறியேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
தெருவத்திலே சிறு கால்வீசி யாடிடச் சென்ற அந்தப்
பருவத்திலே நல் அறிவளித்தேஉனைப் பாடச் செய்தாய்
அருவத்திலே உருவானோய் நின் தண்ணளி யார்க்குளதே

(2218)

ஏதுமொன் றறியாப் பேதையாம் பருவத்
தென்னை ஆட் கொண்டெனை உவந்தே
ஓதும் இன்மொழியால் பாடவே பணித்த
ஒருவனே என்னுயிர்த் துணைவா

(3828)